பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் - 42

எதிர்காலப் போராட்டத்திற்கு உங்கள மாதிரி மாணவங்க, ஆயத்தம் ஆகிறது என்கிறது, ஒழுங்க படிக்கிறதுதான். அதுல எந்த விவகாரமும் வில்லங்கமும் வராம பார்த்துக்கிறதுதான்."

முத்தையா, பேராசிரியரை பிரமிப்பாக பார்த்துவிட்டு, அவருக்கு பரிந்துரை கூறும் தகுதி தனக்கு இல்லை என்பதுபோல் இழுத்து இழுத்துக் கேட்டான்.

"அப்போ சார், நீங்க என்ன செய்யுறதா முடிவு எடுத்தீங்க."

"நான் இன்னும் முடிவுக்கு வரல. கோர்ட்ல ரிட் போடலாமுன்னு ஒரு யோசனை. நாட்ல குழப்பம் இருக்கதுனால, நான் நியாத்துக்குப் போராடுறதுலயும் குழப்பமாய் இருக்கு எந்த வகையிலயும் ஒரு முடிவுக்கு வரமுடியல. கலைமகளை விலைமகள் நிர்வகிக்கிற காலம் இது பழத்தை காலத்தே பயன்படுத்தா விட்டால், அது அழுகிப் போறது மாதிரி, அறிவாளிகளும், தங்கள் அறிவு பயன்படாததாய் நினைத்து அழுகி பர்வெட்டாய் ஆகிட்டாங்க ஸோ. காலேஜ், படிக்காதவன் கிட்டே இருந்தாலும் ஒன்றுதான்; இந்தப் படித்தவங்ககிட்டே இருந்தாலும் ஒன்றுதான். மொத்தத்துல தர்மத்தை நிலைநாட்டக்கூட அதர்மக்காரன் காலுலதான் விழ வேண்டியதிருக்கு அதனால ஒரு முடிவுக்கும் வரல. இவளுக்காகப் பார்க்கேன். இல்லன்னா சாகும்வரை உண்ணாவிரதமுன்னு உட்கார்ந்திடுவேன். எப்படியும், இன்னும் இரண்டு நாள்ல ஒரு முடிவுக்கு வரணும்’

மேகலா, முத்தையாவைச் சோகமாகப் பார்த்தாள். அவனால் முதல்வரையோ, அவர் மகளையோ நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. யாரோ காபித் தட்டை நீட்டினார்கள். மூவரும் சுவை தெரியாமலே அருந்தினார்கள்.

முத்தையா, விடைபெற்றுக் கொண்டான். மேகலா, வாசல் வரை வந்தாள். துடுக்கோடு தோன்றிய அவள், இப்போது கிட்டத்தட்ட அழாத குறையாக, துவண்டு போனதைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பார்வையே தேவையில்லை என்பது போலிருந்தது.

நாள்வேகத்தில் வருகிற கொடுரமான நிகழ்ச்சிகள், கம்பீரமான மனிதர்களையும், எப்படி வருடக் கணக்கான முதுமைக்கு தள்ளிவிடுகின்றன:

முத்தையா, தன்பாட்டுக்கு யோசித்தபடி, பேராசிரியர் வீட்டை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு, முதலில் தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து, பின்னர், முகம் திருப்பாமல் முழு வேகத்தோடு பேய் நடையாய் நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/54&oldid=558660" இலிருந்து மீள்விக்கப்பட்டது