பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தையா வீட்டுக்கு வந்ததும், அம்மா, இன்னொரு போர்ஷனில் அரிசிக்காக பை தூக்கி நடப்பது போலிருந்தது. சகோதரிகள், அண்ணனைப் பார்த்துக்கூட தங்கள் கிழிந்த துணிகளை மூடினார்கள். அந்த அளவுக்கு கிழிசல். அப்பா, வலியால் வாதைப்பட்டுக் கொண்டிருந்தார்.

முத்தையாவுக்கு ஒரு சிந்தனை.

இத்தனைபேர் கஷ்டத்தில் என்ன கல்லூரிப் படிப்பு? பேசாமல் ஒரு வேலைக்குப் போனால் என்ன? எந்த வேலையாக இருந்தாலும் அது, அம்மாவின் பழைய அரிசிக் கடனைக் தீர்க்காது போனாலும், நிறுத்த வேண்டும்.

முத்தையா வழக்கம்போல், தெருவில் இருந்த வழக்கமான டிரக்

அல்ல.

பி.யூ.சி. சர்டிபிக்கேட்டை வைத்து, எம்ப்ளாய்மெண்ட் அலுவலகத்தில் பதிந்து இரண்டு வருடம் ஆகிறது. அடிக்கடி 'ரினிவலும் செய்திருக்கான். 'எப்போ வேலை கிடைக்கும் என்று விசாரித்து விட்டு வரலாம்.

முத்தையா பேருந்தைப் பிடித்துக் கொண்டான்.

அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுகலகத்தில், கல்லாய்ச் சமைந்து நின்ற இளைஞர்கள், ஏதோ சுடுகாட்டுச் சின்னங்கள் போல் தோன்றினார்கள். நடுவில் கருப்பும், இதழ்களில் மஞ்சள் பிரகாசமும் கொண்ட சூரியகாந்திப் பூக்கள் போல் எதிர்கால இருட்டை இருவிழிகளில் சுமக்க முடியாமல் சுமப்பவர்களாய், இளம்பெண்கள் சோர்ந்து, பிடிதாரமாய் காம்பவுண்ட் சுவரையும், துரண்களையும் பிடித்தபடி நின்றார்கள். சிலர் வாழ்க்கையில் பீடுநடை போடுவதற்காக, அந்த அலுவலகத்திற்கு படையெடுத்த முயற்சிகளே, தங்களை நொண்டியாக்கி விட்டதுபோல், இடுப்பை வளைத்தபடி தங்களைச் சுருக்கிக் கொண்டார்கள். ஐந்தாண்டுத் திட்டம் என்றால் என்ன என்பதை அனுபவ பூர்வமாய் அறிந்து, ஐந்தாண்டுகளாக, வெறுமனே 'ரினிவல் செய்பவர்கள்; வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னவர்களை நம்பி வந்து, இப்போது, அவர்கள் என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ என்று மோசம் போகாமல் இருக்க முயற்சி செய்யும் இளம் மகளிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/55&oldid=558661" இலிருந்து மீள்விக்கப்பட்டது