பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சத்திய ஆவேசம்

ஹைகோர்ட்ல வேலை கிடைத்துட்டதாய்ச் சொல்றார். அதனாலதான். இதோ பாருங்க கார்டு.”

பெரிய அலுவலர், சின்ன ஊழியரை முறைப்பாகப் பார்த்துவிட்டு, அதே மாற்றுக்குறையாத முறைப்பு முகத்தோடு, முத்தையாவைப் பார்த்தார். பிறகு, "அவன் கிறுக்கன். எதையோ பார்த்து எதையோ சொல்றான்” என்றபடியே அலட்சியமாக நடந்தார். முத்தையா, அவரைப் பேச்சால் திரும்ப வைத்தான்.

"இந்தா பாருங்க ஸார் எனக்குப் பதில் சொல்ல வேண்டியது ஒங்களோட கடமை. அவர் கிறுக்கன் இல்ல, என்னைத்தான் கிறுக்கனாய் நீங்க ஆக்கப் பார்க்கிறீங்க. எனக்கு இப்பவே இரண்டுல ஒன்று தெரியணும். நான் வேலையில் சேர்ந்திட்டேனா, இல்லியா..? நடந்தவர், திரும்பி நடந்தார். வித்தியாசமானவனைப் பார்ப்பதை உணர்ந்தவர்போல், ஒரு வினாடி திகைத்தார். பிறகு, பழைய அனுபவங்களை பலமாகவும் பாலமாகவும் வைத்துக் கொண்டு நக்கலோடு பதிலளித்தார்.

"முதல்ல கியூவில நின்னு வாங்க" "கியூவில நின்னுதான் வாரேன். நீங்க கொடுக்கிற உருப்படியில்லாத பதிலுக்கு ஒவ்வொரு தடவையும் விளக்கம் கேட்க கியூவுல நிற்கணுமுன்னால், ஒண்னு மார்க்கண்டேயனாக, ஏஜ்பார் ஆகாமல் இருக்கணும். இல்லன்னால், தசாவதாரம் எடுக்கனும்."

"என்ன மிஸ்டர் ஒங்களுக்குத்தான் பேசத் தெரியுமா? இந்த மெட்ராடாலிட்டன் சிட்டில எத்தனையோ ஆண்டித் தெருக்கள் இருக்கலாம். அங்கெல்லாம் எத்னையோ முத்தையாக்கள் இருக்கலாம். எல்லா இடங்கள்லேயும் ஒரே சமயத்துல குடியிருக்கதுக்கு, நீங்க என்ன கண்ண பரமாத்மாவா என்ன..?

"நான் கண்ண பரமாத்மா இல்லை. வேலை தேடுற வெறும் ஆத்மா. உங்களை வேலை கொடுங்கன்னு கேட்கல. அவரு சொன்னதைத்தான் சரி பார்க்கச் சொல்றேன். இதோ, என் கார்டு. பல ஆண்டித் தெரு இருக்கலாம். ஆனால், கார்டோட சீரியல் நம்பர் ஒரே மாதிரி இருக்க முடியாது. இந்தாங்க சார் கார்டு. கொஞ்சம் செக் பண்ணுங்கோ, பிளீஸ்..."

"நீங்க எது வேணுமின்னாலும் ஆபீஸர்கிட்டே பேசுங்க. எனக்கு வெட்டிப் பேச்சு பேச நேரமில்ல."

"அப்படீன்னா, ஒங்க ஆபீசருக்கு வெட்டிப் பேச்சு பேச நேரமிருக்குன்னு சொல்றீங்களா..?

"ஒனக்கெல்லாம் மரியாதை கொடுக்கிறது தப்பு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/57&oldid=558663" இலிருந்து மீள்விக்கப்பட்டது