பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 46

"கரெக்ட். மரியாதை பேச்சுல தேவையில்ல. என்னை திட்டிக்கிட்டே செக்கப் செய்து சொன்னால்கூட போதும். அதுதான் பெரிய மரியாதை. மரியாதையாய் பேசு, பூசி மெழுகுறது தேவடியாத்தனம்."

"யாரப் பார்த்துடா தேவடியாய் பிள்ளன்னு சொல்ற..?

"உங்களை அப்படிக் கூப்பிடணுமுன்னு நீங்க ஆசப்பட்டாலும், நான் அப்படி அழைக்கமாட்டேன். ஏன்னால், தேவடியாப் பிள்ளையாய் இருக்கதுல தப்பில்ல. ஆனால், தேவடியாத்தனந்தான் பண்ணப்படாது."

"டேய்... வாங்கடா எல்லாரும். நாமெல்லாம் தேவடியா பிள்ளியகளாம். போலீஸுக்கு போன் பண்ணுங்கடா. உ.ம். வாங்கடா. வாங்கம்மா."

அலுவலக சிஷ்யகோடி ஊழியர்களும், ஊழியைகளும், பெரிய ஊழியரை மொய்த்தார்கள். பலர், பல்லைக் கடித்தார்கள். சிலர், இவனுக்கு இன்னும் வேணும் என்பதுபோல் தங்களுக்குள் நகைத்தார்கள். வாயை அதிகமாய்த் திறக்காமலே பேசவேண்டியதைப்பேசிவிடும் ஒரு ஊழியர், தன் அபிலாஷையை, முத்தையாவின் வாய்க்குள், வார்த்தைக் கட்டிகளாகப் போடப் போனார்.

"அவரு இருபது வருஷத்து எக்ஸ்பிரியன்ஸ். அவரோட அனுபவமும் ஒன்னோட வயசும் ஒண்ணு. அவரைப் பார்த்தா இப்படிக் கேட்டே? அவரு என்ன கூட்டிக் கொடுக்கிறவரா?"

"நான் அந்த அர்த்தத்துல அப்போ சொல்லல. ஆனால், இப்போ சொல்றேன். ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய வேலையை, இன்னொருவனுக்கு கூட்டிக் கொடுப்பது, அதே மாதிரி காரியம்தான்."

"இப்போ என்னய்யா பண்ணனுங்றே.? “எனக்கு வேலை கிடைக்கலன்னு எழுதிக் கொடுங்கன்னு கேட்கிறேன்."

"இவரு பெரிய கவர்னரு. கேட்டதை எல்லாம் எழுதிக் கொடுத்திடணும்."

"நான் கவர்னர் இல்ல. மனசில இருக்கதை தைரியமாய்ச் சொல்லக்கூடிய குடிமகன். ஆபீஸர்களுக்காக ஆபீஸா, இல்ல உல்டாவான்னு நிருபிக்கப் போறவன். போலீஸ் நிலையத்திற்குப் போகப் போகிறவன்."

பெரிய அலுவலர், தன் சிஷ்ய ஊழியர்களைப் பார்த்தார். அத்தனை பேரும் எகிறாமல், முக்குகளை மட்டும் சுண்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/58&oldid=558664" இலிருந்து மீள்விக்கப்பட்டது