பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 * சத்திய ஆவேசம்

ஒருவர். பெரிய ஊழியரை, தரதரவென்று இழுத்து, "வாங்க சார். பப்ளிக் பேசுறத பேசட்டும். காய்த்த மரத்துலதானே கல்லடி விழும்" என்று அவரை சமாதானப்படுத்துவதுபோல் சற்று தொலைவான இடத்திற்குக் கொண்டு போய், ஒங்களுக்கு அறிவிருக்கா அண்ணே.? சண்டை போட வேண்டிய விவகாரமா. இது? அவனை தாஜா பண்றத விட்டுப்புட்டு." என்று கிசுகிசுத்தார்.

முத்தையா, பொறுமையின் சகல லட்சணங்களையும் கைவிட்டு விட்டுக் கத்தப் போனான். இதற்குள், கியூ கலைந்து, முத்தையாவை, சுற்றி நின்றது. அங்குமிங்குமாகச் சிதறி நின்ற இளைஞர் கூட்டம், திமிரி வந்தது. முத்தையாவிற்கு ஆதரவாக லேசான முனங்கல்கள், நீதிப் பிரசவத்தின் வாதைகள். முத்தையா, அந்த அனுதாபக் கூட்டத்தை ஆதரவுக் கூட்டமாக மாற்றுவதற்காக விவகாரத்தை விளக்கப் போனபோது

எவரோ ஒருவருடைய காரில் வந்து இறங்கிய மாவட்ட அதிகாரி, விரைந்து வந்தார். முகமெல்லாம் மணிப்பர்ஸ் போல் சதை மடிப்புக்கள் கொண்டவர். கைநீட்டிப் பேசும் பழக்கம் கொண்டவர். ஐம்பது வயது இருக்கலாம். பல கொம்பன்களைப் பார்த்தது போன்ற தோரணையோடு கேட்டார்.

"என்ன கலாட்டா? ஏன் கியூவுல நிற்காமல் இப்படி நிற்கிங்க? யூ ஆர் ஆல் எஜூகேட்டட். பிளிஸ் பீ இன் கியூ."

முத்தையா, ஆவேசம் குறையாமல் பதிலளித்தான்.

"இது கியூவில நின்று தனித்தனியாய் பேசுற விவகாரம் இல்ல சார். இங்க நடக்கிற மோசடிக்கு, நாங்க எல்லோரும் விக்டிம்ஸ். அதனாலதான் இந்த ஆபீஸோட வேஷம்போல, கியூவும் கலைஞ்சிட்டு."

"ஒட் 學, மீன்."

"மை நேம் இஸ் முத்தையா, ஆப் எய்டின் ஆண்டித்தெரு, மெட்ராஸ் டொண்டிஒன், எனக்கு ஒங்க ஆபீஸ் மூலம் வேலை கிடைத்திட்டதாய் சொன்னாரு ஒருவரு, ஒங்க கிளார்க்தான் உண்மையைச் சொல்லிட்டார். உண்மை துவங்கிட்டா நிற்காது பாருங்க அதனாலே முழு உண்மையும் தெரியணுமுன்னு கேட்கிறேன். ஏன்னா, அரைகுறை உண்மை முழுப்பொய்யை விட ஆபத்து பாருங்க

அதிகாரி, ஊழியர்களை ஒட்டு மொத்தமாகப் பார்த்தார். நல்லதைப் புரிந்துகொள்ள நேரமானாலும், கெட்டதைப் புரிந்து கொள்ள நேரம் தேவையில்லாதவர். விவகாரத்தைப் புரிந்து விஷமமாகப் பார்த்தார். முத்தையாவே, இவர், ஊழியர்கள் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/59&oldid=558665" இலிருந்து மீள்விக்கப்பட்டது