பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV

மாறும். இன்றைய அநீதிகள், அதர்மங்கள், ஒரு சிலரின் ஆதிக்கங்கள், அவர்களது கரண்டல்கள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் அனைத்தும், தனிநபர் கையில் செல்வ ஆதாரங்கள் அனைத்தும் குவிவதின் விளைவுகளே என்ற எண்ணத்தை கருவாகக் கொண்டு எழுதப்படும் நாவல்களும் உண்டு.

நான்காவதாக, இன்றைய சமுதாய வாழ்க்கையை எதார்த்தமாக சித்தரித்து, இதில் வரும் அதர்மமான, மனித நாகரீகத்துக்கு விரோதமான போக்குகளை மறைக்காமல் சித்தரிப்பதுடன், இந்த அதர்மங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் பலியாகும் நபர்களையும் அதற்குக் காரணமானவர்களையும் மனிதாபிமான உணர்வுடன் சித்தரிக்கும் நாவல்களும் வருகின்றன.

இந்த வகை நாவல்களில் ஒன்றுதான் நண்பர் திரு க.க.முத்திரம் அவர்கள் எழுதிய "சத்திய ஆவேசம்" என்னும் நவீனம். இதனை செம்மலரில் இரண்டு ஆண்டுகளாக வெளியிட்டதற்கு ஆசிரியர்குழு பெருமைப்படுகிறது. ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை சித்தரிக்கிறார்க. சமுத்திரம்.நாம் வாழும் இந்த சமுதாய அமைப்பில் நிகழும் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், அதன் காரணங்களையும், காரணமானவர்களையும் அற்புதமாகச்சித்தரிப்பதில் வெற்றி அடைகிறார். ஒரு டிரஸ்ட்போர்டுக்கு சொந்தமான கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி அந்த போர்டின் சேர்மானான அப்பாவுவால் வஞ்சிக்கப் படுவதை சித்தரிக்கிறது இந்த நவீனம். கல்லூரி முதல்வரான பெருமாள்சாமி, அந்த கல்லூரியை, தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் அப்பாவுவால் பழிவாங்கப்படுகிறார். அந்தக் கல்லூரியிலேயே டைப்பிஸ்ட்டாக இருக்கும் ஒரு பெண் ஊழியரை பயன்படுத்தி பெருமாள்சாமியையும் பழிவாங்குகிறார். ஒரு பெண் தனிப்பட்ட நிர்வாகத்திடம் ஊழியம் செய்யும்போது, எத்தனை எத்தனை அக்கிரமங்களுக்கும் அசிங்கத்துக்கும் ஆளாகிறார் என்பதனை, வசந்தியின் பாத்திரத்தின் மூலம் எடுத்துக்காட்டுகிறார் சமுத்திரம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த போதிலும் மாணவர்களின் தலைவனான முத்தையா நிர்வாகத்தின் கொடுமைகளைப் பொருட்படுத்தாமல், அப்பாவுவை எதிர்த்தால் தனக்கு எதிர்காலமே இருக்காது என்று தெரிந்தபோதிலும் மாணவர்களுக்காகவும், பின்னர் முதல்வருக்காகவும் அந்த தனிப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் (அப்பாவு) அடாத செயல்களை எதிர்த்துப் போராடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/6&oldid=558608" இலிருந்து மீள்விக்கப்பட்டது