பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 * சத்திய ஆவேசம்

“எது. ஒரு நிமிட வேலைக்கு ஒன்பது மாசம் இழுத்தடிக்கிறதா? "யு ஆர் டாக்கிங் டு மச். ஒன்னை போலீஸ்ல ஹேண்ட் ஒவர்

x3

செய்ய அதிக நேரம் ஆகாது. டோன்ட் ஸ்பாயில் யுவர் எதிர்காலம்.

"நிகழ்காலமே இல்லாதவங்களுக்கு ஏது சார் எதிர்காலம்?"

"ஐ கான்ட் வேஸ்ட் மை டய்ம் வித் யூ, இஷ்டம் இருந்தால்,

கம்ப்ளெயின்ட் கொடு. கலாட்டா பண்ணாதே. அதர்வைஸ். சட்டம்

தன்னோட வேலையைச் செய்யும்."

மாவட்ட அதிகாரி, முத்தையாவின் பதிலுக்குக் காத்திராமல், மடமடவென்று, தனக்காக மேலே ஒதுக்கப்பட்ட காலி அறைக்குள் மாடிப் படிகளில் ஏறிக் குதித்துத் தாவினார். முத்தையா, யோசித்தான். போகிற அதிகாரிக்குக் குறுக்கே போய் நின்று, வழி மறிக்கலாமா என்று பார்த்தான். உடனே, வீட்டில் முட்ங்கிக் கிடக்கும் தந்தையின் நினைவு வந்தது. அழுது அழுதே கண்களைக் கரைப்பது என்று தீர்மானிக்கும் அம்மாவின் நினைவு வந்தது. ஒருவேளை விவகாரம் போலீஸ் கைக்குள் அகப்பட்டு, தன் வீட்டைப்போல் கொசு மொய்க்கும் லாக்கப்பிற்குள் அகப்பட்டு விடக்கூடாதே என்றும் யோசித்தான். இளைஞர் கூட்டத்தைப் பார்த்தான். அத்தனை பேரும், உயிர்த்துடிப்பாய் நிற்காமல், உயிர் துண்டித்தவர்களாய் நின்றார்கள். அனுதாபப் படுகிறார்கள். ஆதரவு முகங்களைக் காட்டுகிறார்கள். ஆனால், அதற்கு மேல் போக விரும்பவில்லை. இவ்வளவுக்கும் சம வயதுக்காரர்கள். அசட்டையா? அனுபவம் கொடுத்த சாட்டையா? குடும்பச் சுமையோ? ஆத்திரப்பட்டு ஆத்திரப்பட்டு அதுவே பட்டுப்போன நிலையோ? நா.ே யோாசிக்கும்போது, இவர்கள் ஏன் யோசிக்கக்கூடாது?

முத்தையா, குழப்பமாகப் பார்த்தான். இவனை விட இரண்டு வயது மூத்த ஒரு வாலிபன் வேதாந்தம் பேசினான்.

"இவங்க டைம்மையும் ஸ்பேஸையும் மாற்றிக் காட்டுற அரசாங்க சித்தர்கள். மூவாயிரம் ருபாய்ல முன்று மாத ரிஜிஸ்டிரேஷனை, மூன்று வருடமாய் காட்டுவாங்க... மூன்று வருடத்தை, மூன்று மாதமாய் மாற்றுவாங்க... அந்தக் காலத்து சித்தர்கள், தங்க உயிரைத்தான், இன்னொருவர் உடம்புக்குள்ள விடுவாங்களாம். ஆனால், இவங்க உங்க உருவத்துள்ளேயே, இன்னொருத்தனை பாயவிடுற அட்வான்ஸ்ட் சித்தர்கள். அதாவது, அட்வான்சாய் பணம் கரக்கத் தெரிந்த சித்தர்கள்:

இன்னொரு வாலிபன் கோபாவேசியானான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/61&oldid=558667" இலிருந்து மீள்விக்கப்பட்டது