பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 50

"இவங்களை நிற்க வச்சுச் சுடனும், நார் நாராய் பிய்க்கணும். போலிக்கார்டு தயாரிக்கிறாங்க ஏதாவது ஒரு ஏரியாவுல வேகன்சி வந்தால், தங்களுக்கு வேண்டப்பட்டவங்களை, அந்த இடத்துக்கு இருப்பிடத்தை மாற்றிக்கிட்டதாய் எழுதச் சொல்லிடுறாங்க. அப்புறம் உருப்படியில்லாத நாலைந்து பேரோட, இன்டர்வியூ பட்டியலுல வேண்டப்பட்ட ஆசாமிகளையும் நுழைச்சுடுறாங்க. இவனுகள நிற்க வச்சுச் சுடனும்"

ஒருவர், மீண்டும் வியாக்கியானத்துடன் பேசினான்:

"நீங்க ஒண்ணு, இவரு ரிப்போர்ட் எழுதினால் ஒரு தாள் வேஸ்ட். இவங்கள ஒண்னும் பண்ண முடியாது. வேணுமுன்னால் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதம் எழுதலாம். அவன்கூட பிரசுரிக்கமாட்டான். ஏன்னா, அவன் பிள்ளிகளும் இவன்கிட்டதான் வரணும். பேசாமல், வீட்டுக்குப் போய் மூவாயிரம் ரூபாய் புரட்டப் பாருங்க. கொடுக்க வேண்டிய இடத்துல, கொடுக்க வேண்டிய விதமாய் கொடுங்க. இண்டர்வியூ கார்ட், எம்ளாய்மென்ட் கேரண்டியோட வரும்."

"இருந்தாலும் ஒவ்வொருவரும் தன்னளவுல." "என்ன தன்னளவு. உன்னளவு. ஒரு அளவும் இல்ல. எனக்கு பின்னால வந்தவன் முன்னால வேலை வாங்கிட்டான். இது மாதிரிதான் எல்லா அலுவலகங்களிலும் நடக்குது. உதாரணமா, சொல்றேன் கேளுங்க. என் தம்பி ஒரு விபத்துல மாட்டிக்கிட்டான். அவன ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனோம். டாக்டர் முதல் வார்டு பாய் வரை, அலட்சியமா நின்னாங்க. நான் பலமா கத்துனேன், பலத்த வாய் சண்டை இதனாலயே என்னமோ என் தம்பிக்கு ஒத்த கால எடுத்துட்டாங்க. வேணுமுன்னு செய்தாங்களோ, தெரியாம செய்தாங்களோ, ஆனா, என் தம்பி இப்போ நொண்டி நீ, வளைந்து கொடுத்துப் பேசியிருந்தால், நான் இப்போ வளைஞ்சு வளைஞ்சு நடப்பேனா? ஒன்னாலதான் நான் நொண்டியாயிட்டேன்னு தம்பி கேட்டுட்டான். ஏழைகளுக்கு ஆஸ்பத்திரியே சுடுகாடு ஆயிடுது.

முத்தையா, வளைஞ்து கொடுக்கவா, நிமிர்ந்து நிற்கவா என்று புரியாமல், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டான். மேலே அங்கே நின்றால், நிச்சயம் ஒரு கொலையாவது செய்ய வேண்டியது வரும். வரலாம். அவன் மெளனமாக வெளியேறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/62&oldid=558668" இலிருந்து மீள்விக்கப்பட்டது