பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது போர்ஷன்களைக் கொண்ட பாழடைந்த மண்டபம் போன்ற வீட்டில், ஒரு போர்ஷனில், முத்தையாவின் தந்தை மல்லாந்து கிடந்தார். நார் நாராய் விட்டுப்போன நார்க்கட்டில். சுவரில் ஏறிய

கொண்டிருந்தன. அவரோ, வாதை கொடுத்த வலது காலை மடக்கினார். மடக்கியதை நீட்டினார். நீட்டியதை அம்புக்குறிபோல் ஆக்கினார். தலையை, மேலும் கீழுமாக ஆட்டினார். பக்கவாட்டில் சாய்ந்தார். அப்படியும் வலியை வலிமை கொள்ள முடியவில்லை. அய்யா. அம்மா என்று அவர் கத்தியதும், அன்னம்மா ஒடி வந்தாள். அவனைப் பார்த்ததும், அவரால் கண்ணிரை அடக்க முடியவில்லை. அடக்க முடியாததை மறைப்பதற்காக அவர் குப்புறப் படுக்கப்போனபோது, கட்டிலில் நான்கு சதுர அங்குலம் வியாபித்திருந்த ஒரு ஒட்டையில் முட்டி சிக்கி, வலி முன்னிலும் அதிகமாகியது. அந்தச் சமயத்தில் முத்தையாவும் உள்ளே வந்தான். மகனைப் பார்த்ததாலோ என்னவோ, வாய்விட்டு அரற்றினார்.

"நான் யாருக்கும் எந்தப் பாவமும் செய்யலியே. ஒரமாய் நடந்த என்மேல, ஏத்திட்டுப் போன ஆட்டோ ரிக்டிைாவை துரத்தப்போன போலீஸ்காரனைக்கூட, வேண்டாமுன்னு கையெடுத்துக் கும்பிட்டேனே. கடவுளே! ஒன்னை நம்புன எனக்கே இந்த கதின்னா,

ஒனக்கு எந்த கதியோ..?

வலி தாளாது, அவர் சுரணையற்றுக் கிடந்தார். மூச்சு மட்டும் பெரிதாக வந்தது. நடையில் கூட துள்ளிக் குதித்துத் தாவும் தன் கணவன் பேச்சற்றுக் கிடப்பதைக் கண்டு, அன்னம்மா, தன் தலையிலேயே அடித்துக்கொண்டு, "என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க என் தெய்வமே. என் தெய்வமே. நீ போகாதே. போயிடப்படாது" என்று ஒலமிட்டபோது, வெளியே நின்ற அவள் மகள்களும், குடித்தனக்காரர்களும், வீட்டுக்குள் வந்து பொங்கி வழிந்தார்கள். ஒருவர் உரிமையான கோபத்தோடு பேசினார்.

"நான் அப்போ காட்டியே சொல்றேன். ஆஸ்பத்திரிக்கு இட்டுன்னுப் போங்கோன்னு. மயிலெண்ணெய் தடவுனால் எப்படிக் கேட்கும்? இப்போ உயிருக்கே சரி. சரி. முத்து சட்டுன்னு ஒரு சைக்கிள் ரிக்ஷாவை இட்டுக்கினுவா, ஆஸ்பத்திரியை விட புத்துர் பூட்டா சரியாயிடும். உம். ஜல்தி."

முத்தையா, அம்மாவைப் பார்க்க, அவள் மகனைப் பார்க்க, அந்த இருவரையும் எல்லோரும் பார்த்தார்கள். புத்துளர் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/63&oldid=558669" இலிருந்து மீள்விக்கப்பட்டது