பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 54

"இந்த பைல்ஸ்ல இருக்குதான்னு பார்க்கிறீங்களா..? "இது முக்கியமான லட்டர்ஸ் இருக்கிற பைல்ஸ். ஒங்க லட்டர்

இதுல வராது. ஒருவேளை என்டிஸ்ல போயிருக்கலாம்."

"என்டிஸ்னா. என்ன ஸார்.?"

"என்னப்பா நீ, ஏதோ வேலைக்காரனை விரட்டுறது மாதிரி விரட்டுறே போனால் போகிறதேன்னு சொன்னால், மறுநாள் கழித்து வா. ஏய் ராமா. மிட்லண்டில என்ன ஒடுது."

முத்தையா, வன்முறை வார்த்தைகளை வாய்க்குள்ளேயே சிறையிட்டுக் கொண்டான். ஆவேசத்தை உள்வாங்கிக் கொண்டான். இயக்குநர் அறையை நோக்கி, கோபாவேசமாக நடந்தான். பியூன் தடுத்தார். டைரக்டரை, அதுவும் ஒரு ஐ.ஏ.எ. ஸை கண்டவங் கெல்லாம் பார்க்க முடியுமா? ஒரு அரசாங்கத் தாளைக் கொடுத்து எதற்காகப் பார்க்கணும், ஏன் பார்க்கனும் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார். முத்தையா, சொன்னதைச் செய்தான். நடந்த மோசடியை அறிவித்ததும், இயக்குநரே வெளியே ஒடிவந்து, தன்னைக் கூப்பிடுவார் என்றுகூட நினைத்தான்.

இரண்டு மணி நேரம் வரை, யார் யாரெல்லாமோ இயக்குநர் அறைக்குள் போக்குவரத்து செய்தார்கள். அவன்தான் கூப்பிடப் படவில்லை. இறுதியாக, மணியடித்ததும் உள்ளே போய், முத்தையா கைப்பட எழுதிய ஸ்லிப்போடு பியூன் வந்தார்.

"இன்னைக்கு ஐயா பிஸி. நீயே அனுப்பாமல், என்கிட்ட ஏய்யா அனுப்புனேன்னு திட்டிட்டார். ஒரு நாளும் திட்டாதவர்கிட்ட, உங்களால் திட்டு வாங்கிட்டேன். ஹி..ஹி..ஹி.. பரவாயில்ல."

"ஏன் பார்க்க மாட்டாராம்.? “எது வேணுமுன்னாலும் எழுதி, தபாலுல அனுப்பனுமாம்." "அதையெல்லாம் சுருக்கமாகவும், தெளிவாயும் ஸ்லிப்ல எழுதியிருந்தேனே. உங்க அய்யா படிக்கலியா?

"அவர் என்ன பரீட்சை பேப்பரை திருத்துற வாத்தியாரா? ஐ.ஏ.எஸ். அதிகாரி சாமி. முதல்வரியை மட்டுந்தான் படிப்பார். அதுலேயே முழுசையும் தெரிஞ்சுக்குவார்."

"நாளைக்காவது பார்க்க முடியுமா? "அய்யாதான் தெளிவாச் சொல்லிட்டாரே. எழுதி அனுப்புங்க. அய்யாவுக்கு நேரமில்ல. எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் குறைபாடு களைப் போக்குறதுக்கு ஒரு கமிட்டி போட்டிருக்கு. அதுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/66&oldid=558673" இலிருந்து மீள்விக்கப்பட்டது