பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 * சத்திய ஆவேசம்

அய்யாதான் கன்iனர். ரொம்ப பிஸி. நம்மள கொஞ்சம் கவனிக்கப்படாதா..?

"ஒய்யா பிஸி. நீ பசி. ஒங்க எல்லாரையும் புசிக்கு முன்னால நாடு உருப்பட முடியாது."

முத்தையா, ஆவேசமாக நடந்தான். உயர்நீதிமன்ற அலுவலகத்தை நோக்கி நடந்தான். டுப்ளிகேட் முத்தையாவை கண்டுபிடிக்க வேண்டும். அவன் தலைமை அதிகாரியிடம் முறையிட வேண்டும். முறையிடுவது என்ன முறையிடுவது. ஆஸ்பத்திரிக்கு வரும் நேரமும், அரிசிக்காக ஆயத்தம் செய்யும் நேரமும் ஒரே சமயத்தில் வருவதால், எதையும் செய்ய முடியாமல் அம்மா தவிக்கும்போது, தங்கைகள் என்னை அர்த்தபுஷ்டியோடு பார்க்கும் போது, நான் வாழாவெட்டியாய் இருப்பதில் அர்த்தமில்லை. எனக்கான வேலையைப் பெற்றாக வேண்டும்.

முத்தையா, வேக வேகமாக நடந்தான்.

சென்னையில் பாரிமுனையில் படர்ந்திருந்த உயர்நீதிமன்றக் கட்டிடத் தொகுப்பை, முத்தையா, பொருமியபடியே பார்த்தான். வழக்கறிஞர்களும், அவர்ளை முன்னாலும் பின்னாலும் சூழ்ந்த கட்சிக்காரர்களுமாய் கழுகுகளோ அல்லது காகங்களோ ஊர்வதுபோல் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். நீதி என்பது வேறு வேறு வியாக்கியானங் களுக்கு உட்பட்டது என்பதைக் காட்டுவதுபோல், பல்வேறு வகையான நீதிக் கட்டிடங்களை சமமின்றிக் காட்சியளித்தன.

எப்படியோ, டுப்ளிகேட் முத்தையா கிடைத்துவிட்டான். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், எந்த கோர்ட், எந்த செக்ஷன் என்ற விவரத்தை அறிய முடியாமல் போனாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் ஆளைப் பிடித்துவிடலாம் என்று நம்பியவன், நம்பியபடியே, எஸ்டாபிளிஷ்மென்டில் இருக்கும் பள்ளித் தோழர் கோபால்ராஜ் மூலம் ஆசாமியைப் பிடித்து விட்டதில் ஆனந்தப் பட்டான்.

என்றாலும், இவன் எதிர்பார்த்ததுபோல், டுப்ளிகேட் முத்தையா, பெல்பாட்டம் கீழேயும், பொம்மை சட்டை மேலேயுமாய் இதழோர குறும்போடு இல்லை. சரியான சோடா பாட்டல் கண்ணாடி பிடரிக்குள் ஒளியப் போவது போலிருந்த கண்கள். எதையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/67&oldid=558674" இலிருந்து மீள்விக்கப்பட்டது