பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 *சத்திய ஆவேசம்

"மெட்ராஸ்ல. இருக்கிற ஒரு அரசியல்வாதி. சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். ஐயாயிரம் ருபாய்கொடு, வேல வாங்கித் தாரேன்ன்னார். நான் யோசிச்சேன். வீட்ல சொன்னப்போ, என் தங்கச்சி கழுத்துச் செயின கழற்றிக் கொடுத்தாள். அம்மா காதுல இருக்கதை எடுத்துத் தந்தாள். அப்படியும் ஆயிரம் குறைஞ்சுது. எப்படியோ அந்த ஆள்கிட்ட சொல்லி, அவர் பேர்லயும், என் பேர்லயும் பேங்க்ல ஜாயிண்ட் அக்கெளண்ட்ல நாலாயிரத்தைப் போட்டோம் இரண்டு மாதத்துல, சொன்னபடி இந்த வேலய வாங்கித் தந்துட்டார். கிருஷ்ணன் என்கிற பெயரை, முத்தையான்னு மாத்திக்க கஷ்டமாத்தான் இருந்தது. ஆனாலும், என் குடும்பத்தை வாழ வைக்கிற ஆசையில, அது பெரிசாத் தெரியல. இப்படி எனக்கு வேலை கிடைச்சதுல, என்னை மாதிரி ஒரு ஏழை பாதிக்கப்படுவார்னு அப்போ இவ்வளவு நிதர்சனமடாய் புரிலய. ஒன்றை மட்டும் தெளிவாக்கனும் நான் முத்தையாவை ஏமாத்துறதாய் நினைச்சு இந்த வேலையில சேரல. கூட்டுக்கணக்கில் போட்ட நாலாயிரம் ரூபாய் போயிடக் கூடாதுன்னும், அந்த நாலாயிரத்துக்கு தன்னோட நகையை தந்த தங்கையின் எதிர்காலம் நல்லா இருக்கணுமுன்னு நெனச்சும், இந்தக் காரியத்தைப் பண்ணிட்டேன்:

கிருஷ்ணன், பேசிக் களைத்தவன்போல், அவர்ளை மூச்சு முட்டப் பார்த்தான். மூவரும் சிறிது நேரம் பேசவில்லை. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, கோபால்ராஜ். விவகாரத்திற்கு வந்தான்

"ஓங்களுக்கு ஆயிரம் இருக்குதுன்னால், இவருக்கு ஐயாயிரம் இருககு. இவருக்கும் ஏழைத் தங்கச்சிங்க இருக்கு."

கிருஷ்ணன், கோபால்ராஜை மேற்கொண்டு பேசவிடாமல், இடைமறித்தான்:

"இப்போ, நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன். ஸார். அதுக்கு முன்னால ஒரு வார்த்தை நீங்க மேலதிகாரிங்ககிட்ட சொன்னால், எனக்கு வேலை போயிடுமே தவிர, ஒங்களுக்குக் கிடைக்காது. பிராக்டிக்கலாய் பேசுவோம். எனக்கு வேலையும் போய், ஜெயிலும் கிடைக்கிறதுனால, ஒங்களுக்கு எதுவும் லாபம் கிடைக்கப் போறதில்ல. அதனால ஒன்று நான் வேலையை ராஜினாமா செய்யனும்: இல்லன்னா வாங்குற சம்பளத்துல பாதியை நிஜமான முத்தையாவுக்குக் கொடுக்கணும்... எனக்கு இரண்டாவதுல இஷ்டம். இல்ல, மேலதிகாரிங்ககிட்ட ரிப்போர்ட் பண்ணனுமின்னாலும் பண்ணுங்க. இதை சவாலாய்ச் சொல்லல. சாகாமல் இருக்கோமே என்கிற தவிப்புல சொல்றேன். சே. என்ன வாழ்க்கை படிக்க வச்ச குடும்பத்துக்கு நல்லது செய்ய நினைச்சா, அது சமூகத்துக்கு துரோகமாய்போகுது; சட்டத்துக்கு விரோதமாய் மாறுது. இப்போ என்ன ஸார் செய்யனும்.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/69&oldid=558676" இலிருந்து மீள்விக்கப்பட்டது