பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

நம் சமுதாய வாழ்வில் அநீதிகளை எதிர்க்கும் ஒரு புதிய சக்தி தோன்றுவதை சமுத்திரம் நல்லமுறையில் சித்தரிக்கிறார். இதுதான் இந்த நாவலின் சிறப்புத் தன்மை, சமுதாய வாழ்வில் நடக்கும் எதார்த்தங்களைச்சொல்லிவிட்டால் மட்டும்போதாது. அந்தச் சமுதாய வாழ்வுக்குள்ளேயே தீமைகளை எதிர்க்கும் சக்திகள் தோன்றத்தான் செய்யும் என்னும் உண்மையை எடுத்துக் கூறுவதில் சமுத்திரம் வெற்றி அடைகிறார். இதுபோன்ற கருத்தினை திரு. சமுத்திரம் அவர்கள் இதற்கு முன் எழுதிய நாவல்களின் (ஒரு கோட்டுக்கு வெளியே, ஊருக்குள் ஒரு புரட்சி) எடுத்துக் காட்டியிருக்கிறார்.

தமிழ்நாவல் வரலாற்றில், இது ஒரு புதிய திருப்பமாகும்.

நாவலாசிரியர் என்ற முறையில் சமுத்திரத்தின் நாவல்களின் சிறப்புத்தன்மை இதில்தான் அடங்கியுள்ளது. தனித் தன்மையும் சமுதாய வாழ்வில் நடக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக மனித சக்தி தோன்றத்தான் செய்யும். அது, உலகம்மை என்ற பெண்ணின் தோற்றத்தின் மூலம் ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலில் கண்டோம்.

இங்கே இந்த நாவலில் கல்வியை வியாபாரமாக்கி கொள்ளை படிக்கும் நபர்களை எதிர்க்கும் சக்தியாக வறுமையில் வாடும் மாணவன் தோன்றத்தான் செய்கிறான்.சதிகாரர்களையும், அக்கிரமக்காரர்களையும் எதிர்த்திட முடியும். அது தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, கல்லூரியாக இருந்தாலும் சரி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தோன்றும். அவைகளை முறியடிக்கமுடியும் என்பதை இந்த நவீனத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.அதுவே இதன் வெற்றி.திருசமுத்திரம் அவர்கள் ஒவ்வொரு வாக்கியத்திலுமே உதாரணங்களைக் கூறி விளக்கும் பாணி அவருக்கே உரித்தான சிறப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/7&oldid=558609" இலிருந்து மீள்விக்கப்பட்டது