பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念8 * சத்திய ஆவேசம்

குப்பைத் தொட்டில போடவைங்க வாறேன் கிருஷ்ணன். ஒங்களப் பார்த்தது, என்னை நானே பார்த்துக்கிட்டது மாதிரி இருக்குது’

கிருஷ்ணன், பிரமித்து நின்றான். அவனால் பேசக்கூட முடியவில்லை. முத்தையாவைப் பார்த்துக்கொண்டு நின்ற கண்களில் பனி படர்கிறது. பேசப்போன நாக்கே, வாய்க்கு தாழ்ப்பாளாகியது. அவன் மலைத்து நின்று, மறுபடி தலையை ஆட்டியபோது, முத்தையா அங்கே இல்லை.

கோபால்ராஜ், முத்தையாவை ஆச்சரியமாகப் பார்த்தான். முத்தையா சொல்வதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்ல்ை. அதேசமயம், அவனை மறுத்துப் பேசவும் அவனுக்கு மனம் வரவில்லை. தன்னால் நியாயம் என்று நினைத்து அதை செயல்படுத்த முடியாமல்போய், அதை இன்னொருத்தன் செய்து காட்டினால் என்னென்ன உணர்வுகள் வருமோ, அந்த உணர்வுகளில் அவன் அல்லாடினான். பொறுமை, சுயபரிசீலனை, குற்றவுணர்வு, மலைப்பு, மாயாதை.

கோபால்ராஜிடம் சொல்லிவிட்டு, முத்தையா வெறுமையோடு நடந்து கொண்டிருந்தான். பலப்பல வழக்கறிஞர்கள் கும்பல் கும்பலாகக் கூடியிருந்த அறைகளை நோக்கியபடியே, தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். தற்செயலாக வழக்கறிஞர்களின் அறை ஒன்றை, அவன் நோக்கியபோது

பேராசிரியர். பெருமாள்சாமி, கரங்களை மார்புக்குக் குறுக்காக கிராஸாக வைத்துக்கொண்டு, ஒரு நாற்காலியின் நுனியில். கீழே விழப்போகிறவர்போல் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகேயுள்ள ஸ்டுலில் மேகலா, விக்கித்துப்போய் இருந்தாள். இரண்டு அறைகளைக் கொண்ட அந்த ஹாலில், சீனியர்களும், ஜூனியர்களும், கறுப்புக் கோட்டுக்களைக் கழற்றிக் கொண்டும், போட்டுக் கொண்டும், ஒருவருக்கொருவர் கோர்ட் விவகாரங்களை கமென்ட் அடித்துக் கொண்டும் தென்பட்டார்கள். மொத்தத்தில் அந்த அறையில், கட்சிக்காரர்கள் தவிர, மற்ற எல்லாருமே ஆனந்தக் களியாட்டத்துடனேயே இருந்தார்கள்.

பேராசிரியர். ெ ாள்சாமியை எதிர்நோக்கிய நாற்காலியில் யாரும் இல்லாததில் ರು. அவர் வக்கீலுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று, முத்தையர் அனுமானித்துக் கொண்டான்.

“ஸார்." என்று சொல்லிக்கொண்டே, முத்தையா உள்ளே ஒடினான்.மேகலா, அவனைப் பார்த்துவிட்டு, பரபரப்பாக எழுந்தாள். வேறொரு சமயமாக இருந்திருந்தால், முத்தையா. அவளைப் பார்த்து, நீங்க உட்காருங்க. என்று சொல்லியிருப்பான். இப்போது, தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/71&oldid=558678" இலிருந்து மீள்விக்கப்பட்டது