பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 - *சத்திய ஆவேசம்

ஆர்டரை அவமதிச்சு, மனுஷன் ஆபத்துல சிக்கிக்கக்கூடாதேன்னு அவருக்காகக்கூட நான் லேசாய் பீல் பண்ணுனேன். இலைமறைவு காய்மறைவாய் ஆர்டரோட இம்ப்ளிகேஷன்ஸ் எப்படின்னு விளக்கினேன். உடனே அவரு, ஒங்க கோர்ட் ஆர்டர்ட நாக்கு வழிக்கக்கூட ஆகாது. ஹைகோர்ட் நீதிபதிகள் அத்தனை பேரும் இங்கே வந்து, ஒங்களச் சேர்க்கச் சொன்னாலும் முடியாது. உங்களால இன்னும் என்னலாம் ஆகுமோ, என்ன செய்ய முடியுமா அதைச் செய்து பாருங்கன்னு சொல்லிட்டார். -

மூச்சை பிடித்துப் பேசிவிட்டு, இப்போது பேச்சைப் பிடித்து மூச்சைவிட்ட பேராசிரியரை நோக்கி முத்தையா கேட்டான்.

oஅப்புறம்." "நான் என் வக்கீல்கிட்ட போனேன். அவர், டிரஸ்ட் சேர்மன், உங்கள சேர்த்துக்கமாட்டேன்னு சொன்னதுக்கு எவிடென்ஸ் இல்ல. நாளைக்கு அவரே பெருமாள்சாமி டுட்டில சேர்லன்னு தெரிவிக்கலாம். அதனால, நானும் உங்களோட வரேன். டிரஸ்ட் டோர்ட் சேர்மனைப் பார்ப்போம் என்றார். வக்கீலை கூட்டிக்கிட்டுப் போறது சும்மாவா? போனால், டிரஸ்ட் டோர்ட் அப்பாவு, பேச வேண்டியதை கோர்ட்ல. பேசுங்க. இங்க ஒங்க பருப்பு வேகாதுன்னுட்டார். பெருமாள்சாமியை சேர்க்க முடியாதுன்னு எழுதிக் கொடுங்கன்னு வக்கீல் கேட்டதுக்கு, நான் எதுக்குய்யா எழுதிக் கொடுக்கனும்? இதுவரைக்குந்தான் மரியாதை இனிமேல் நின்றால், என்ன் நடக்குமின்னு எனக்கே தெரியாதுன்னார். வக்கீல் பயந்துட்டார். என்னை பலவந்தமாய் இழுத்துட்டு, காலேஜ் காம்பவுண்டுக்கு வெளியே வந்துதான் மூச்சு விட்டார்:

பேராசிரியர். பெருமாள்சாமி, மீண்டும் மூச்சு வாங்கினார். மேகலா, தந்தைக்குப் பின்புறமாக வந்து, அவர் நாற்காலி விளிம்பைப் பற்றிக்கொண்டு நின்றாள். முத்தையாவுக்கு, ஏதோ ஒரு சஸ்பென்ஸ் கதையை யாரோ ஒருவர் வாசிக்கக் கேட்பது போலிருந்த்து. அதில் அல்லாடுவது தனது பேராசிரியர் என்ற நினைவு ஏற்பட்டதும், அவன் படபடத்தான். முன்னாள் கல்லூரி முதல்வரை மெளனமாகப் பார்த்தான். அவர் தொடர்ந்தார்:

"வக்கீல் மூலம் கோர்ட்ல இன்னொரு பெட்டிஷன் போட்டேன். கோர்ட் ஆர்டர்படி என்னைச் சேர்த்துக்கல சேர்க்கும்படி, டிரஸ்ட் போர்டுக்கு டைரக்ஷன் கொடுக்கும்படி கேட்டேன். நான் எங்கே கேட்டேன்? வக்கீல் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டுக் கேட்டேன். டிரஸ்ட் போர்ட் தன்னோட உத்திரவை மதிக்காத்துல நீதிபதிக்கே கோபம். அவரோட சேம்பர்ல, தனிப்பட்ட முறையில,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/73&oldid=558680" இலிருந்து மீள்விக்கப்பட்டது