பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 62

டிரஸ்ட் போர்ட கண்படி திட்டினார். தனியார் கல்லூரி, தனிமனிதன் இப்படி தனி என்கிற வார்த்தை இருக்கது வரைக்கும் நாடே உருப்படாதுன்னு கத்தினார்!

"ஆனால், கோர்ட்டுக்கு வந்ததும், அவராலயும் ஒண்னும் செய்ய முடியல. நான் தாக்கல் பண்ணுன பெட்டிஷன்ல, என்னைப் பத்து நாளைக்குள் சேர்க்கணுமுன்னு டைரக்ஷன் கொடுத்தார். அதனோட நகல கோர்ட் மூலமும் என் மூலமும் டிரஸ்ட் போர்டுக்கு அனுப்பியாச்சு. பத்து நாளும் போய், பதினைந்து நாளும் வந்துட்டு டிரஸ்ட் போர்ட் ஹைகோர்ட் ஆர்டரை மதித்ததாய் தெரியல. என்ன செய்யலாமுன்னு வக்கீலைக் கேட்க வந்தேன். கோர்ட்ல, கண்டம்ப் ஆப் கோர்ட் போடலாம்; டிரஸ்ட் போர்ட், நல்லா மாட்டிக்கிட்டு என்றார். மாட்டிக்கிட்டது நான்தான். ஹைகோர்ட்டே தன்னோட உத்திரவை ஒரு பார்ட்டி மதிக்கலன்னா, அதுதானே ஆக்ஷன் எடுக்கணும் அதுக்கும் நானே பெட்டிஷன் போடணுமாம். கோர்ட், டிரஸ்ட் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்புமாம். அப்புறம் விசாரணையாம். அப்புறம் ஆக்ஷனாம். அப்புறம் அப்பீல் ரிட் வாங்கி ஒரு மாசம் ஆகுது. இன்னும் அது அமலாகல. அதுக்குக் காரணமானவனைத் தண்டிக்க முடியல. மேலும் மேலும், நான்தான் பெட்டிஷன் போடணுமாம் என்னப்பா கோர்ட் இது?

முத்தையா, பேராசிரியரைப் பார்க்க முடியாமல், மேகலாவைப் பார்த்தான். அவளோ, அவன் அங்கிருப்பதை அறியாதவள்போல் மேல்கூரையைப் பார்த்தாள். உதட்டை காரணமில்லாமல் கடிப்பது போலிருந்தது. காரணமும் இருக்கலாம். ஒருவேளை கண்களில் தேங்கிய நீர், கீழே விழாமல் இருப்பதற்கு அது ஒத்துழைப்புக் கொடுக்கிறதோ என்னவோ.

முத்தையா, பேராசிரியரிடம் பக்குவம்ாகப் பேசினான்:

"ஸார். எடுத்த காரியத்தை இடையில் விடுறது தப்புன்னு நீங்களே சொல்விங்க.."

"அது முன்னால."

"அதைத்தான் நான் இப்போ சொல்றேன். பொறுத்ததே பொறுத்திங்க, இன்னும் கொஞ்சம்."

"விஷயம் நீ நினைப்பது மாதிரி இல்ல. கோர்ட் அவமதிப்பு வழக்குன்னு வந்துட்டா, அது எத்தன மாசம், வருஷம் இழுக்குமோ. கோர்ட் என பக்கம். நியாயம் என் பக்கம். ரிட் கிடைத்து ஒரு மாதம் ஆகுது. ஆனாலும், அமலாகல என்ன நாடுப்பா இது? என்ன கோர்ட்டுப்பா? என்ன சட்டதிட்டம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/74&oldid=558681" இலிருந்து மீள்விக்கப்பட்டது