பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 64

அளவுல மூணாவது மனுஷனாஆனது உண்மைதான். ஆமாம் இனிமே அப்படி ஆகமாட்டேன் மேடம்."

மேகலா, முத்தையாவையே பார்த்தாள். 'கல்லூரியில் கம்பீரமாகப் பேசிய இவர் முகம், இப்போது எவ்வளவு குழந்தைத் தனமாக, அழாக்குறை தோரணையில் இருக்கு:

அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. தங்களுக்காக ஒருவர் உதவுகிறாரோ இல்லியோ, உள்ளத்தால் உருகுகிறார் என்பதை அறிய அறிய, அவள் கண்கள் பனித்தன. அவனிடம் பேசினால் எங்கே அழுகை வந்துவிடுமோ என்று அஞ்சியவள்போல், முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு, சிறிது நேரம் பேசாது இருந்தாள். பிறகு, "ஐ அம் ஸாரி மிஸ்டர். முத்தையா. இன்னும் எவ்வளவோ பட வேண்டியதிருக்கு. அப்பா இதுக்குள்ள ஆதரவு தேடப் பார்க்கிறாரேன்னு சொல்ல வந்தேன். சொன்னது தப்புத்தான். நீங்க அதை சீரியஸ்ாய் எடுத்துக்கப்படாது."

முத்தையாவால் எதுவுமே பேச முடியவில்லை. ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு அறிவொளி பாய்ச்சிய பேராசிரியர் பெருமாள்சாமி, ஏதோ ஒரு வக்கீலின் வருகைக்காகக் காத்திருப்பதும், பயணத்தின் முடிவு தெரியாது பதை பதைப்பதும், அவனின் சொந்தப் பிரச்சினைகளை சிறிதாக்கியது. பதவியும் பறியோய், நீதியும் பறிபோய்-நிர்க்கதியாய் நிற்கும் அவரையும், மேகலாவையும் பார்த்துவிட்டு, கறுப்பு:கெளன் போட்ட வழக்கறிஞர்களைப் பார்த்தான். நீதிக்குத் துக்கம் விசாரிக்கிறார்கள் போலும்.

மேகலா, அவன் அந்நியன் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில், "வாங்களேன், கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்." என்றாள்.

முத்தையாவும், மேகலாவும், உயர்நீதிமன்ற கட்டிட காம்பவுண்டுக்கு வெளியே வந்தார்கள். பல்லவ பஸ்களும், பயணிகளும், சந்து பொந்துகளில் வாழ்பவர்களும், இவர்களைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் போகிறவர்களுமாக, சைனா பஜார் அல்லோகலப்பட்டது. இருவரும் ஒரு கிளிஜோஸ்யர் அருகே தற்செயலாக வந்தார்கள்.

கூண்டுக்குள் அகப்பட்ட கிளி, சிறகில்லாத சிறுமையோடு வெளிவந்து, யாரோ ஒருவருக்கு ஒரு கார்டை எடுத்துக் கொடுத்தது.

மேகலா, அந்தக் கிளியை பார்த்துக்கொண்டே பேசினாள்:

"அதோ அந்த உயர்நீதிமன்றக் கட்டிடமும், இந்த கிளிக்கூண்டு மாதிரிதான். அந்தக் கட்டிடத்திற்குள் சிறையிருக்கும் கிளியும் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/76&oldid=558683" இலிருந்து மீள்விக்கப்பட்டது