பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தையா, ஏதோ ஒரு பெரிய காரியத்திற்கு உறுதுணையாக நிற்கப்போகிற பெருமிதத்தில், கல்லூரிக்குள் நுழைந்தான். நடந்து கொண்டிருப்பது அளவுக்கு மிஞ்சிய அநியாயம் என்று அறியும் போது, அதை வெல்லும் வழி தெரியவில்லையானாலும், வென்றாக வேண்டும் என்ற உறுதி பிறக்குமே, அப்படிப்பட்ட நிராயுத பாணியான உறுதியுடன், பேராசிரியர். பெருமாள்சாமிக்கு, நிதி திரட்டப் போகிறோம் என்பதைவிட, அவருக்கு தோளோடு தோளாக, மாணவர் படை நிற்கிறது என்பதை, நீதிமன்றத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் உணர்த்தப் போகிறோம் என்ற உணர்ச்சி வேகம்.

முட்டிகளுக்குக் கீழே விலகிய வேட்டியை, ஒரு கையால் இழுத்து முடியபடி, மண்குத்துக்கூட தாங்காத மிதமான செருப்புடன் பலமாக நடந்தான். மாணவ சகாக்களிடம், தங்கள் முன்னாள் முதல்வர் படும் வேதனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் தாகம். மாணவர்களை ஒன்று திரட்டி, மனோவேகத்தில் ஒடி, அத்தனை கொடுமைகளையும் மின்சார வேகத்தில் சாடவேண்டும் என்ற துடிப்பு. முத்தையா, தன் கண்ணில் பட்ட ஒரு மாணவக் கும்பலை நோக்கி நடந்தபோது, அந்த இளங்கும்பல், அவனைப் பார்த்து நகர்ந்து, அவன் பேச்சைத் துவக்குவதற்கு முன்பாக, நான்கைந்து கரங்கள், அவன் கைக்குள் ஒரு வாரப் பத்திரிகையைத் திணித்தது. அவர்களை, மாணவ நீரோக்களாக நினைத்து முத்தையா சாடப் போனபோது, அவன் கை சுமந்த பத்திரிகையை, ஒருவன் பிரித்துக் காட்டினான். அந்த வியாபாரப் பத்திரிகையில் பிரிக்கப்பட்ட பக்கத்தில் -

"கல்லூரி முதல்வரா? காம முதல்வரா? என்று கறுப்பு பிளாக்கில், வெள்ளையெழுத்தில் தோன்றிய தலைப்பு. பாக்ஸ் அயிட்டம். மாணவர்கள், அவன் விலாவில் மெளனமாக இடித்து, அவனைப் படித்துப் பார்க்கும்படி மோவாய்களை முன்னும் பின்னுமாக ஆட்டினார்கள்.

முத்தையா, தனக்குள்ளேயே படிக்கப் போனான். முதல் வரியைப் படித்துவிட்டு, சகாக்களைப் பார்த்தான். பிறகு ஒரே மூச்சில் படித்து, படித்த சுமை தாங்க மாட்டாமல், அந்தப் பத்திரிகைக்குள் மிதந்து, நீச்சலடிக்க முடியாமல் முழ்கிப் போனவன் போல், அதையே வெறித்துப் பார்த்தான். அதில், இப்போது எழுத்துக்கள் தெரியவில்லை. பேராசிரியர். பெருமாள்சாமியும், மேகலாவும் தோன்றினார்கள். அவர்கள் இருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/78&oldid=558685" இலிருந்து மீள்விக்கப்பட்டது