பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

இன்றைய சமூக அமைப்பில் -

+ எளியவர்களுக்கு, இராக்கனவுகள் கூட எதிரிகளே.

இன்றையச்செய்திகள் நேற்றைய காக்டைல்-பார்ட்டிகள். ஏழையின் உழைப்பு, அவன் குடும்பத்திற்கு எதிராகவே திருப்பப்படுகிறது. நீதிமன்றங்கள் தர்மசபைகள் ஆகா. 大 யோக்கியனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பு

அயோக்கியனிடமே உள்ளது. 大 பிரச்சினையை தீர்க்கவேண்டிய கல்வியே ஒரு

பிரச்சினையாகி விட்டது. 大 அநியாயக்காரர்கள்தங்களின்காரியங்களைநியாயவான்கள்

மீது போட்டு, தப்பிக்கிறார்கள்.

ஆனாலும் -

நியாயம் போராட்டங்களை இழக்கலாம், ஆனால் போரை இழக்காது. ஏனென்றால் -

  • இந்த போக்கிரித்தனமான சமூக அமைப்பே ஜாமீனில்தான் இருக்கிறது.”

மேலே குறிப்பிட்டுள்ள வாசகங்களை, நானும், ஏட்டுச் கரைக்காயாய் படித்ததுண்டு. ஒரு சமயம், ஒதுக்கித் தள்ளியிருக்கவும் கூடும். ஆனால் கடந்த இரண்டாண்டு கால அனுபவத்தின்போது, இந்த வாசகங்களின் ஒவ்வொரு எழுத்தும்,என் ஒவ்வொரு உயிர்அணுவிலும் ஊடுருவியது. இவை, ஒட்டுமொத்தமாக வந்தன. சில தாக்கின. சில தாங்கின. பல, தாக்கம் ஏற்படுத்தின. குருதி கொதிபட ஆன்மாவைச்சாறு பிழிந்ததுபோல் அவதிப்பட்ட காலத்தில், அனுபவ பிரசவத்தில் உருவான வrதையான முதல் கட்டவாசகங்கள், இரண்டாவது கட்டவிஞ்ஞானபூர்வமான சிந்தனையில் சென்று, மூன்றாவது கட்டமாக ஒரு ஆறுதலையும், ஒரு சத்திய ஆவேசத்தையும் நித்தியமாகக் கொடுத்து உள்ளன. ஆவேசம், சத்தியமாகாது, ஆனால் சத்தியத்திற்கு ஆவேசம் வந்தால்..?

நாவல் கதையைச் சொல்வதற்கு முன்பாக, நான் பட்ட கதையைக் கேளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/8&oldid=558610" இலிருந்து மீள்விக்கப்பட்டது