பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 68

இன்னொரு பையன் இடைமறித்தான்: "வாங்கடா. நாம் எல்லோரும் வெளில போய், கடைகள்ல தொங்குகிற இந்த பத்திரிகையை கொளுத்துவோம். நாட்ல என்ன வேணுமுன்னாலும் எழுதலாமுன்னு ஆயிட்டுது பாரு. வெத்தில் பாக்குக்கூடப் போடாத மனுஷனப் பார்த்து, எப்படி எழுதியிருக்கான் பாரு. வாங்கடா, அவன் பத்திரிகை ஆபீஸ் முன்னால மறியல் பண்ணுவோம். கண்ணாடி ஜன்னல்கள தூள் தூளாக்குவோம்."

"என்னப்பா நீ? அவன் போலீஸ்ல சொல்லுவான். போலீஸ் லாக்கப்புல போடும். டிரஸ்ட் போர்ட் நம்மையும், நல்ல சமயமுன்னு எக்ஸ்பல் பண்ணும்."

"என்னடா நீ? பிரின்ஸ்பிலுக்காகக் போராடுன எவரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிச்சது கிடையாது."

"நாம் எதுக்காகப் போராடுறோமோ அதுக்கு எதிராய் நம்ம போராட்டத்தை திருப்பி விடப்படாது பாரு. அதோட பேராசிரியர், முத்தையா, நமக்குத்தான் தெரிஞ்ச மனிதர். ஊரு உலகம் குடிகாரன்னு எழுதுறதை நம்புமோ. இல்லியோ. ஒருத்தன் ஒரு பொண்ணப் பிடிச்சு இழுத்தான்னு பேசினாலோ, எழுதினாலோ, அதை நம்பும். நம்புறது மட்டும் இல்ல. நம்பணுமுன்னு நினைக்கும் மனோவியாதி இப்போ அதிகம். நம்ம பிரின்ஸ்பாலுக்கும் பழி அதிகமாகத்தான் வந்து சேரும்."

“என்னடா நீ.... நம்ம பிரின்ஸ்பாலுக்கு தெரிஞ்சவங்க எங்கேயாவது ஒரு முலையில் இருப்பாங்க கல்வி வட்டாரத்துல நல்லா தெரிஞ்சவரு. அவரைப் பற்றி என்ன நினைப்பாங்க? நாட்ல நடக்கிற விஷயங்கள் மக்களுக்குத் தெரியாமல் இருக்கதுல எவ்வளவு ஆபத்து இருக்கோ, அவ்வளவு ஆபத்து நடக்காததை நம்புறதுலயும் இருக்கு."

இந்தச் சந்தர்ப்த்தில் பிரபு, அவர்களைப் பார்த்து குறுநகை போட்டபடி, கல்லூரி அலுவலகத்தைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். அவன் போன விதம், தன்னால்தான் அந்தச் செய்தி வந்தது என்று சொல்வதுபோல் ஒரு சில மாணவர்களுக்குத் தோன்றியது. இண்டு பேர் அவனைப் பார்த்துப் பாயக்கூடப் போனார்கள். மற்றவர்கள், அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள்.

முத்தையா, பேச்சற்று நின்றான். மூச்சற்றவன் போல், மெளடீகமாகப் பார்த்தான். பிறகு "எதுக்கும் பேராசிரியரைப் போய் பார்க்கிறேன். அவர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு யோசிக்கலாம்" என்று சொன்னபோது, அவன் சொற்களில் நம்பிக்கை நலிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/80&oldid=558687" இலிருந்து மீள்விக்கப்பட்டது