பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம்- 70

முத்தையா, ராணுவவீரன் நடப்பதுபோல் நடந்து, அவர்களை நெருங்கினான்.

"நீங்க ஏன் சார் கவலப்படுறீங்க? ஒரே ஒரு வியாபாரப் பத்திரிகை. கிசுகிசுப்பிலேயே காலத்தை ஒட்டுற பத்திரிகை. இது ஒங்க பிரச்சினை இல்ல, என் பிரச்சினை. என் மாணவர் சகோதரர்களோட பிரச்சினை. நாளைக்கே அந்த பத்திரிகை ஆபீசை தவிடு பொடியாக்குறோம் பாருங்க.."

பேராசிரியர். பெருமாள்சாமி, சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபோது, அந்த சாய்வுத் துணியே நிமிர்ந்தது போலிருந்தது. மேகலா கண்களைத் துடைத்தபடி, அவனைப் பார்த்து சோகத்துடனும், கூச்சத்துடனும் புன்னகைத்தாள். கிட்டத்தட்ட அனாதையாகி, கோர்ட்டிற்கும், டிரஸ்ட் போர்டிற்கும் இடையே உதை பந்தாய் போன பேராசிரியர், தங்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பதை முத்தையா மூலம் உணர்ந்தவராய், அதை உணர்த்தியவன் கைகளிரண்டையும் பற்றியபடி, மேகலாவைப் பார்த்தார். அவள், எழுந்துபோய், ஒரு நாற்காலி யைக் கொண்டுவந்து போட்டாள்.

சிறிது மெளனம். சிறிது நெருடல், சிறிது நேர ஆதரவுப் பார்வைகள். பேராசிரியர், இப்போது புதுமனிதர்போல் பேசினார்:

"ஏம்பா. அன்னிக்கி ரிட் வாங்கியிருக்கேன்னு சொன்னேன் பாரு. அது ரிட் இல்லியாம். பிரைவேட் இன்ஸ்ட்டுஷன்ஸ் மேல ரிட் வாங்க முடியாதாம். பட், அதேமாதிரி எபக்ட் உள்ள ஸ்டேய் உண்டாம். நான் வாங்குனது ஸ்டேய், ரிட் இல்ல."

மேகலா, தந்தைக் குழந்தையைச் செல்லமாகக் கண்டித்தாள்: "என்னப்பா இது. நீங்க வாங்குனது ரிட்டோ, ஸ்டேயோ; மொத்தத்துல ஏட்டுச் சுரைக்காய். இப்போ அதுவா முக்கியம்? இந்த பத்திரிகைக்காரன் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் அவமானமாய் எழுதியிருக்கான். இந்தச் சமயத்துல, நீங்க, ரிட்டுக்கும் ஸ்டேய்க்கும் வித்தியாசம் சொல்லி கிளாஸ் நடத்துறிங்களாக்கும்."

பேராசிரியர். பெருமாள்சாமி, முத்தையாவைப் பார்த்து ஏலாச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். அவன் பேச்சை மாற்றினான்.

"அந்த வாடிக்கை பத்திரிகைக்காரனுக்கே போன் செய்து கேட்க வேண்டியதுதானே ஸார்?

"கேட்டேன். எடிட்டருக்கே போன் போட்டேன். மொதல்ல, நீங்கதான் அந்த பிரின்ஸ்பால்னு ஏன் எடுத்துக்கிறிங்கன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/82&oldid=558689" இலிருந்து மீள்விக்கப்பட்டது