பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 * சத்திய ஆவேசம்

கேட்டான். அது நான்தான்னு ஒரு மடையனுக்குக்கூடத் தெரியும். ஒனக்குத் தெரியாதான்னேன். உடனே, தீர விசாரிச்சுதான் எழுதுறோமுன்னு திமுராப் பதில் சொன்னான். உடனே, நான் அடேய் பாவி நான் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் இருக்கலாம். ஆனால், பொண்ண தப்பாக்கூட நினைக்கிற மனுஷன் இல்லடான்னேன். அவன்கிட்டேயே ஆறுதல் கேட்குறது மாதிரி புலம்பினேன். டக்குன்னு போனை வச்சுட்டான். அப்புறம், இவளோட நச்சரிப்புத் தாங்காமலே, என்னோட ஸ்டேய் ஆர்டர் வக்கீல் மூலமாயே நோட்டீஸ் அனுப்பியிருக்கேன். அவன் பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்காட்டால், கேஸ் போடுவேன்னு எழுதியிருக்கு."

"அவன் எங்கே ஸார் மன்னிப்புக் கேட்டான்? இந்த மாதிரி கேஸுக்குன்னே ஒவ்வொரு அக்கப்போர் பத்திரிகையும் ஒரு லீகல் ஸெல் வச்சிருக்குதாம். இந்தப் பத்திரிகைக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று நமக்குத்தான் லட்சியப் பிரச்சினை."

"நீ சொல்றதும் உண்மைதான். பொதுவா பாதிக்கப் பட்டவனுக்கு பாதிப்புக் கொடுத்தவன்தான் அபராதம் கட்டணும். ஆனால், நான் அபவாதத்துக்கு ஆளானதோட அபராதமும் கட்டியாச்சு. ஆமாம்பா, அவனுக்கு டெலிபோன் செய்ய ஒரு ரூபாய். அவன் பத்திரிகையை வாங்க ஒரு ருபாய். இது என்னோட அபராதத்துக்கான வட்டிஅபராதம் என்கிறது வக்கீல் பீஸ்லான ஒவ்வொரு வாய்தாவுக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய். அசல் என்கிறது அவரோட சீனியருக்கு முன்கூட்டியே கொடுத்த அய்யாயிர ரூபாய் தவணைப் பணம்: "அந்தப் பத்திரிகைய சும்மா விடப்படாது ஸார்."

"நீ வேற. அந்த பத்திரிகை பணத்தை என்ன பண்றதுன்னு பிரச்சினையில இருக்கவன். நான் பணப் பிரச்சினையில் இருக்கவன். வக்கீல், இந்தக் காலத்து சட்டங்களை விளக்குனாரு டேமேஜ் கேட்டு வழக்குப் போடலாம். அதுக்கு, ஆயிரக்கணக்கான ரூபாய்ல ஸ்டாம்ப் வாங்கணுமாம். இங்க வீட்ல என்னடான்னா, நூறு ரூபாய்க்கே...”

"அப்பா..!"

"சும்மா இரும்மா. இவன் ஒனக்கு அந்நியனாய் இருக்கலாம். ஆனால், எனக்கு அந்நியோன்யன். எனக்கு ஒண்ணுமே புரியமாட்டக்கு முத்தையா."

"ஒரு ஐடியா சார். ஒங்க ஸ்டுண்ட் ஏகாம்பரம் கைவை' பத்திரிகைக்கு எட்டிடருல்ல? அதுவும் இந்த வாடிக்கை பத்திரிகை மாதிரி அசல் காலிப் பத்திரிகை. அவங்கவிட்ட நடந்த விஷயத்தைச் சொல்லுங்க, பிரசுரிப்டாரு கோர்ட்டை விட, முள்ளை முள்ளால எடுக்கது பெட்டர். இதுல, டிரஸ்ட்போர்ட் அக்கிரமமும் அம்பலமாயிடும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/83&oldid=558690" இலிருந்து மீள்விக்கப்பட்டது