பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 * சத்திய ஆவேசம்

ஆசிரியர் உள்ளே வந்தார். எடிட்டர் கேட்டார்: "சிலுக்கோட புதுப் போட்டே கிடைச்சுதா? அவள் ஜட்டியோட நடப்பேன்னு சொன்னதை பாக்ஸ் அயிட்டமா போட்டாச்சா? அப்புறம், அவள் நடிகை நளினா, கால்மேல் கால் போட்டு போட்டோ அனுப்புறேன்னுட்டு, பாவாடையோட அனுப்பி இருக்காள். கிழிச்சுப் போடுய்யா"

பேராசிரியர். கோபத்தோடு எழுந்தார். "என்னை மன்னிச்சிடு ஏகாம்பரம். சிலுக்கைப் பற்றி எழுதுற ஒன் புனிதமான பேனா என்னைப் பற்றி எழுதி மாசுபடக்கூடாது. இனிமேல் நீயாய் கேட்டால்கூட, எனக்குத் தேவையில்ல. நான் வாரேன்:

எடிட்டரால், தன் ஆசிரியரை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. பழைய மாணவப் பருவத்திற்குப்போய் குமைந்தார். பிறகு பருவம் தவறிய மழைபோல், அவர் பார்வை சிதறியது.

பேராசிரியரும், முத்தையாவும் வெளியே வந்தார்கள். ஒரு கடைக்குள் மெளனமாக நுழைந்து ஒரு ஒரமாகக் கிடந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்தில், பழுப்புச் சட்டை மனிதர் ஒருவர், அவர்கள் எதிரில் உட்கார்ந்தார். சிறிது நேரம் அவர்களையே பார்த்துவிட்டு, மடமடவென்று பேசினார்.

"நான் ஒங்க பிரில்லியண்ட் ஸ்டுடண்ட் எடிட்டராய் இருக்கிற பத்திரிகையில, புருப் ரீடர் கண்ணன். நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. ஏன்னா, இப்போ இருப்பது பத்திரிகைகள் அல்ல. குரங்கு கை பூமாலைகள் எடிட்டர்கள் வெறும் வியாபாரிகள். கொழுத்த பணப் பெருச்சாளிங்களோட எண்ணந்தான் இவங்க மை. ஏழை எளியவங்களோட உயிர்கள், இவங்க எழுதுற தாள். ஏழை மக்களுக்கு எதிராக-திசை திருப்பி விடுகிற விசித்திர செய்திகளை, ஏழையான என்னை மாதிரி ஆட்களே சரி பார்க்கிறோம். அதாவது, எனக்கு எதிராகவே நான் செயல்படுறது இந்த சமுதாயத்தோட நோய்."

கண்ணன் தொடர்ந்தார். "இப்போ செய்திகள் எப்படி வருது தெரியுமா? பெரிய பணக்காரன் ஹோட்டல் சோழாவிலேயோ, கன்னிமேராவுலேயோ பிரஸ் கான்பரன்ஸ் வைப்பான். அதுவும் நைட்ல. ரிப்போர்ட்டர்களுக்கு காக்டெய்ல் கொடுப்பான். ஒரு கையில் ஒரு கிப்டையும் இன்னொரு கையில் தன்னோட ஸ்டேட்மெண்டையும் கொடுப்பான். மறுநாள் 'கிப்டுக்கு தக்கபடி பத்திரிகையில செய்தி வரும் காக்டைல். அதாவது, மது மட்டும் பரிமாறப்பட்டால், வெறும் செய்தி கிப்ட்டையும் சேர்த்துக் கொடுத்தால், போட்டோவோட செய்தி நம்ம ரிப்போர்ட்டர்கள் கிப்ட்டட் ஆசாமிகள்தான். இப்படி பணக்காரன் கொடுக்கிறதை வாங்கி செய்தி போடுறவங்க, ஏழைகளைப் பார்த்தால் அவங்க சம்பந்தமாய் எதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/87&oldid=558694" இலிருந்து மீள்விக்கப்பட்டது