பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திய ஆவேசம் * לל

எப்படியாவது குளிப்பாட்டி விடுவது என்று தீர்மானித்து, அன்று சாமர்த்தியமாக, கோட்டாவுக்கு மீறி ஒரு டப்பில் பாதியளவு தண்ணிரைப் பிடித்து வைத்துவிட்டாள்.

சுகந்தி, புடவையைக் களைந்து, குழாய்ச் சுவரில் வைத்துவிட்டு, பாவாடையை மார்புவரை விசாலப்படுத்தியபடி, ஒரு ஈயப்போணியை எடுத்து, டப்புக்குள் விடப்போனவள், ஏய் சுகந்தி. என்ற சத்தம் கேட்டு திரும்பினாள். அவள் அக்காள் கமலசுந்தரி. "நான் குளிச்சுடுறேன். நீ நாளைக்குக் குளி..." என்று சொல்லிக் கொண்டே வந்தாள். சுகந்தி, அவள் பேச்சைக் காதில் வாங்காதது போல, ஈயப்போணியை 'டப்புக்குள் விட்டபோது, கமலசுந்தரி, தங்கையின் கையை, அந்தப் போணியோடு சேர்த்துப் பிடித்தாள்.

சுகந்திக்குத் தாங்கமுடியாத ஆத்திரம். பதினொட்டு வயதில், அம்மாவின் அழகையும், அப்பாவின் கம்பீரத்தையும் இரண்டரக் கொண்ட அவள், அக்காவின் கரத்தில் இருந்து, தன் கையை விலக்கப் போனாள். இரவிலும், பகலிலும் காற்று புகாத பகுதியில் படுத்து, புழுக்கத்தில் புழுத்ததுபோல் மாறி, கொசுக்களாலும், மூட்டைப் பூச்சிக்களாலும் மாறி மாறி கடிபட்ட தன் தேகத்தில் நீராடும்போது மட்டுமே, அவள் சுகம் காண்பவள். நேற்று இரவிலிருந்தே, நாளைக்குக் குளிக்கப்போறன்ே. நாளைக்குக் குளிக்கப்போறேன். என்று கற்பனையில் லயித்தவள். அவள், அரசின் தடுமாற்றத்தால் தயவால், கடந்த ஒரு மாதமாகக் குளிக்க முடியாமல் கஷ்டப்படுவது அவளுக்குத்தான் தெரியும். இந்தச் சமயத்தில், குளிப்புச் சுகத்தைத் தடுப்பவள். அவளுக்கு அக்காவாகத் தெரியவில்லை. அசல் வறட்சி பூதமாகவே கண்ணில் பட்டாள். தமக்கையின் கரத்தைத் தட்ட முடியாததால், சுகந்தி அவள் கரத்தையும், ஈயப்போணியையும் சேர்த்துப் பிடித்து, நீர் மொண்டு, தலைக்கருகே கொண்டு போனாள். கமலசுந்தரி, கொதித்துப் போனாள்:

"என்னடி, ஒனக்கு அவ்வளவு திமுரா? இன்னிக்கு நான்தான் குளிப்பேன்."

"இது நான் பிடிச்சு வச்ச தண்ணtர்." "நான் சமைச்ச சோறை நீ சாப்பிடும்போது, நீ பிடிச்ச தண்ணில நான் ஏன் குளிக்கப்படாது? எழுந்திருடி.."

“எது நடந்தாலும், அது மட்டும் நடக்காது." "ஏய் சொல்றதக் கேளுடி. இன்னிக்கி நான் குளிச்சாகணும்."

"சாயங்காலமா தண்ணி வந்தால் பிடி. பிடிச்சுவச்சு குளி. இப்போ, நான்தான். நானேதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/89&oldid=558697" இலிருந்து மீள்விக்கப்பட்டது