பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII

வர்த்தகக் கலாசார சமூக அமைப்பு இயங்கி வரும் இந்தக் காலத்தொடரில், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், உதவி செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்த எனக்கு எத்தனையோ அனுபவங்கள். மாதிரிக்கு, இதோ ஒன்று -

ஒரு ஆசாமி வருகிறார். எனக்கு கும்பிடு போடுகிறார். “வணக்கம். சமுத்திரம் ஸார்.ஒங்க கதைன்னா. எனக்கு உயிரு” "ஒங்க பேரு.”

"இதோ கார்டு. இதுதான் பேரு.” "என்ன விஷயமாய்." "இலங்கையில. தமிழர்களை. இந்தப் பாழாப்போற சிங்களப் பயல்க.எப்படிக்கொல்றான் பாருங்க. இதை நாம்விடக்கூடாதுவார்."

"நிச்சயமாய் விடக் கூடாது.” "சரியாச் சொன்னீங்கசமுத்திரம்ஸார்.நாளைக்கு. இலங்கைத் தமிழர்களுக்காக... கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்கோம். டி.வி. வருமான்னு கேட்க வந்தேன்.”

"ஒருநிமிடம்.மன்னிக்கணும்.நாளைக்கு-இலங்கைத்தமிழர்களை ஆதரித்து. சில அரசியல் கட்சிகளோட ஊர்வலம் இருக்குது. காமிரா அதுக்குப்போகணும்.அதனால உங்களுக்குக்கிடைக்கலமன்னிக்கணும்.” "எப்போ காமிரா கிடைக்குமுன்னு சொல்லுங்க. அப்போ... உண்ணாவிரதத்தை வச்சுக்கிறோம்."

"ஏன்வார்.உங்களுக்குக்கொஞ்சமாவதுபொறுப்பு இருக்குதா?. இலங்கையில். நம்ம இனத்தையே அழிச்கட்டு வாராங்க. நம்ம ஆட்கள் அங்கே சாகிறது.ஒங்கமுகத்தைடி.வியிலகாட்டுறதுக்கு ஒருவாய்ப்பா? எங்க நிறுவனத்தை அவமானமாய் பேசிட்டிங்க... நான் யாருன்னு காட்டுறேன்.

வந்தவர்களிடம் பேரம் பேசத் தெரியாத - தெரிய விரும்பாத நான், மறுநாள் வழக்கம்போல் பத்திரிகைகளைப் புரட்டினேன். நியாயமாகவே, வந்தவர், சொன்னதை நிரூபிப்பதில் அரிச்சந்திரன்தான். "டி.வி.யில் 'சமுத்திரத் தவறுகள்."

இப்படி, பப்ளிவிட்டி மோகினியிடம் பிடிபட்ட பலர், இந்த மோகினியை வைத்து விபச்சாரம் செய்த, எனது ஒரு சில சகாக்களின் உதவியுடன், பண பலத்தையும், பத்திரிகை பலத்தையும் எனக்கு எதிராகத் திருப்பி விட்டனர். ஆனாலும் இந்த நரிகளின் ஊளைச் சத்தத்தில் என் சொல் எடுபடாமல் போகவில்லை, மடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/9&oldid=558611" இலிருந்து மீள்விக்கப்பட்டது