பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 78

கமலசுந்தரி, திங்கையின் முன்னால் இருந்த டப்பை, வேறு பக்கம் திருப்பி விட்டாள். அதை மீண்டும் தன் பக்கம் திருப்பி விட்டுக்கொண்டே, சுகந்தி, "அம்மா. பாரும்மா. பாரும்மா” என்றாள்.

அன்னம்மா ஒடிவந்தாள். 'டப்பை அங்குமிங்குமாக உருட்டியவர்கள் அம்மாவைப் பார்த்ததும், தொட்ட கைகளை விட்டார்கள். அப்போது குப்புற விழப்போன டப்பை, அம்மாக்காரி குனிந்து பிடித்துக்கொண்டாள். மகள்களை அனல் வீச பார்த்த அன்னம்மா, பிறகு புனல் வீசப் பேசினாள்:

"அவரு கெதியா இருந்தால், இப்படி குதிப்பிங்களாடி? ஒரு மாசமா காலோட தலைவச்சு முடங்கிக் கிடக்காரு. நாம வருத்தப் படக்கூடாதுன்னுட்டு, துடிக்கிற வலியையும் பல்லால் கடிக்காரு. கொஞ்சமாவது வீட்டு நிலமை தெரிஞ்சால் இப்படிக் குதி போடுiங்களா?"

"நானு குருவி சேர்த்தது மாதிரி, குளிக்கதுக்கு தண்ணிர் சேர்த்தால், இவள் இப்போ வந்து கலாட்டா பண்றாம்மா."

"நீங்களே சொல்லுங்கம்மா.... எத்தனை நாளிக்கி நானு குளிக்காமலே இருக்கது? முந்தாநாள் பிடிச்ச தண்ணிர்ல அண்ணன் குளிச்சிட்டு. அதுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடி நீங்க குளிச்சிட்டிங்க. வயசுப்படி பார்த்தாலும், இன்னிக்கு நானுதான் குளிக்கணும்."

அன்னம்மா, மகள்களை மாறி மாறிப் பார்த்தாள். அம்மா தீர்ப்பளிப்பது வரைக்கும் காத்திருந்து சலுகை காட்டுபவள் போல், சுகந்தி, ஈயப்போணியை, டப்பில் போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள். கமலசுந்தரி, அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தாள். அந்தத் தாயோ, தன் கவலையை, சுமந்து பெற்ற செல்வங்களிடம் சுமக்கக் கொடுப்பவள்போல் பேசினாள்:

"ஒருத்திக்கு ஒருத்தி, ஏண்டி ஒங்களுக்கு விட்டுக் கொடுக்க மனசு வரமாட்டக்கு? அப்பா படுக்கையில கிடக்கார்; இன்னிக்கி மத்தியானம் சாப்புடல. ராத்திரி சோறு பொங்க அரிசி இல்ல. ஒங்க அண்ணன் என்னடான்னா வீட்டு நெலமை தெரியாமல், போராட்டம் போராட்டமுன்னு, பழைய பிரின்ஸ்பால் பின்னால சுத்துறான். இந்த நெலமையில, ஒங்களுக்கு குளிப்பு கேட்குதாக்கும்? ராத்திரிக்கு நாமெல்லாம் பட்டினின்னு நெனச்சுப் பாத்திங்களா? கையில ஒரு பைசா இல்ல."

சுகந்தி, ஈயப்போணியையும், டப்பையும் இன்னும் விடாமலே, சலிப்போடு பதிலளித்தாள்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/90&oldid=558698" இலிருந்து மீள்விக்கப்பட்டது