பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 * சத்திய ஆவேசம்

திருதிருவென்று விழித்தபடி, மீண்டும் உள்ளே நுழைந்த அந்த இளைஞர்கள் யாரையும் காணாமல் திகைத்தார்கள். பிறகு இவர்களில் ஒருவன், “முத்தையா. முத்தையா..." என்று ஏலம் போட்டான். சத்தம்கேட்டு வெளியே வந்த அன்னம்மா, அவனை வினாவோடு பார்த்தாள்.

"முத்தையா வீடு எது?” "நான்தான் அவனோட அம்மா. அவன் இல்ல. என்ன வேணும்?"

"சும்மா பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தோம்." அந்த இருவரும், அன்னம்மா கூப்பிடுவதற்கு முன்னதாவே வீட்டுக்குள் நுழைந்தார்கள். உள்ளே நார்க் கட்டிலில், ஒரு காலில் முட்டி லேசாக வீங்கியிருக்க, லேசாய் முனங்கிக் கொண்டிருந்த முத்தையாவின் தந்தை அருணாசலத்தைப் பார்த்ததும், அவர்கள் கண்களில் பரிதாபம் தானாகக் குடிகொண்டது. கட்டிலில், ஒரு பழைய புடவை பெட்டாக மடிக்கப்பட்டிருக்க, தலையணையில் தலையை அங்குமிங்கும் உருட்டி, அருணாசலம் அவர்களைப் பார்த்தார். இதற்குள் அன்னம்மா, அத்துப்போன முக்காலி ஒன்றையும், இற்றுப்போன முக்காலி ஒன்றையும், முந்தாணிச் சேலையால் துடைத்து, இழுத்துப் போட்டாள். அதேசமயம், அவர்களை சுட்டெரிப்பதுபோல் பார்த்தாள்.

எல்லாம் ஸ்டிரைக்குக்கு, முத்தையாவ இழுக்க வந்திருப்பாங்க. தலவிதி. மேயுற மாட்ட கெடுக்குமாம் நக்குற மாடு. இவனுகளும் கெட்டு என் மகனையும் கெடுக்காங்க.

அன்னம்மா, தனக்குள்ளேயே அவர்களைத் திட்டியபோது, உள்ளே ஈரத்தலையோடு வந்த கமலசுந்தரி, வாசலைக் கடந்து வெளியே நின்றாள். சீக்கிரமா வெளில போங்க. அப்போதான் நான் உள்ளே போகமுடியும் என்பதுபோல், அவர்களைப் பார்த்தாள்.

இளைஞர்களில் ஒருவன் தன்னை அருணாசலத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"என் பேர் கோபால்ராஜ், முத்தையாவோட பிரண்ட் இவரு பெயர் கிருஷ்ணன். ரெண்டு பேருமே ஹைகோர்ட்ல கிளார்க்காய் இருக்கோம்" அன்னம்மாவுக்கு மகிழ்ச்சி. இவர்கள், காலேஜ் பையன்கள் அல்ல. அவர்களை, சிநேகித பாவத்துடன் பார்த்தாள். கோபால்ராஜ், எடுத்த எடுப்பிலேயே சகஜமாகப் பேசினான்.

"முத்தையாவுக்கு நான் ரொம்ப வேண்டியவங்க, ஒங்க குடும்ப நிலமை முழுகம் எனக்குத் தெரியும். இப்போ முத்தையாவ மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/93&oldid=558701" இலிருந்து மீள்விக்கப்பட்டது