பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 * சத்திய ஆவேசம்

பெஞ்சு கிளார்க்காகப் பணியாற்றும் இந்த குறுகிய காலத்தில், எல்லோரையும்-குறிப்பாய் சாட்சிகளை, அவர்களது பார்வையையே எடையாக வைத்து அறிந்துவிடும் கிருஷ்ணனுக்கு, நிலமை புரிந்துவிட்டது. கோபால்ராஜின் காதைக் கடித்துவிட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

தனியே விடப்பட்ட கோபால்ராஜ், அருணாசலத்தை ஆற்றுப் படுத்தினான்:

"கவலப் படாதிங்கய்யா. நல்லவங்க கெட்டதில்ல. முத்தையா காலேஜ்ல வேலை நிறுத்தம் செய்யும்போது, மொதல்ல நீங்க தடுத்திங்களாம். அப்புறம், அவன் காரணத்தைச் சொன்னதும், நீங்களே ஸ்டிரைக்குல கலந்துக்கப் போனிங்களாம். முத்தையா என்கிட்டே சொன்னான். சொன்னார். இந்த மனசு யாருக்கும் வராதுங்கய்யா..."

அருணாசலம், பெருமிதமாக மீசையை முறுக்குவதுபோல், உடைந்த காலை ஒரிரு தடவை ஆட்டிக்கொண்டார். பிறகு, "கிறுக்குப் பயல். என்னைப் பத்தியும் பேசுவானா?” என்றார்.

"ஒங்களப் பற்றி அவன் சொல்லாத நாளே கிடையாது. ஒங்க மேல மோதுன ஆட்டோ ரிக்ஷா டிரைவரைக் கூட போலீஸ் கேட்டாலும், நீங்க சொல்லலன்னு சொன்னான். ஒங்க நல்ல மனக்க்குத்தான் இப்படி ஒரு நல்லபிள்ளை கிடைச்சிருக்கான். ஒங்க மகனும் ஒங்கள மாதிரிதான்."

"இல்லப்பா.. என் மகன் என்னைவிட ஒருபடி உசத்தி” பேச்சு, எங்கெல்லாமோ போய்க் கொண்டிருந்தது. கோபால்ராஜ் முத்தையாவைக் கண்டிக்கிறேன் என்று தனக்கு ஆறுதல் கூறாமல், கட்சிமாறி பேசுவதில், அன்னம்மாவுக்கு கொஞ்சம் வருத்தந்தான். ஆகையால், பேசாமல் அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள். இதற்குள் வெளியே நின்று சலித்துப்போன கமலசுந்தரி, உள்ளே வந்தாள். வீட்டுக்காரம்மாவை, அவளது சொந்த மாடிவீட்டிலேய சினிமாக் காவலில் வைத்திருந்த சுகந்தி, அவளை விடுதலை செய்துவிட்டு, வீட்டிற்குள் வந்தாள். அங்கே இருந்த கோபால்ராஜைப் பார்த்துவிட்டு, சிறிது திடுக்கிட்டு, பிறகு, அக்காவுடன் ஒட்டிக்கொண்டே, யாரும்மே என்று கிசுகிசுத்தாள்.

இதற்குள் வெளியேபோன கிருஷ்ணன், நான்கைந்து காகிதக் கூடைகளைச் சுமந்து வந்தான். கோபால்ராஜ், அவற்றை வாங்கி, தரையில் வைத்தான். ஐந்தாறு ஆப்பிள் பழங்கள்; ஏழெட்டு ஆரஞ்சுப் பழங்கள்: ஒரு கிலோ திராட்சை இரண்டு 'சீப்பு வாழைப் பழங்கள். கிருஷ்ணனுக்கு, இரண்டு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/95&oldid=558703" இலிருந்து மீள்விக்கப்பட்டது