பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 84.

வரவும் ஆசைதான். தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்று பயம். மெள்ள அடியெடுத்து நடந்து, இருபது பத்து ரூபாய்,நோட்டுக்களை, நார்க்கட்டிலில் போட்டுவிட்டு, பயத்தோடு பார்த்தான்.

அதை உறுதிப்படுத்துவதுபோல், அருணாசலம் படபடத்தார். "என்ன இதெல்லாம்? என்று சிலிர்ப்போடு சொன்னார். அன்னம்மா, விழித்தாள். தினமும் ஒசிப் பத்திரிகைள் படிக்கும். கமலசுந்தரியும், சுகந்தியும், ஒருவரையொருவர் பார்த்தபடி, இந்த அயோக்கியங்க ஏதோ திட்டம் போட்டு வந்திருக்காங்க. போலீஸ்ல சொல்லனும் என்பதுபோல் வெளியே பார்த்தார்கள். கிருஷ்ணன், கெஞ்சாக் குறையாகப் பேசினான்:

'அய்யா. தப்பாய் நினைக்கப்படாது. என்னை வாழ வைத்திருப்பவர் முத்தையா. ஒரு தடவ, இருநூறு ரூபாய் கடனாய்க் கொடுத்தாரு அதை திருப்பிக் கொடுக்கதுக்காக வந்தேன். அசலுக்கு வட்டி வாங்க மாட்டாரு. அதுக்குப் பிரதியாய்த்தான் இந்தப் பழங்கள் வாங்குனேன். கொடுத்த கடன கொடுக்கதுக்குத்தான்'கோபால்ராஜை கூட்டிக்கொண்டு வந்தேன்."

அருணாசலம், சந்தேகத்தோடு கேட்டார்: "என்னப்பா இது? அவன்கிட்ட ஒனக்கு கடனாய் கொடுக்க பணம் ஏது?" என்றார். இளம்பெண்கள் இருவரும், தந்தையை பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்வதுபோல் முகத்தை நொடித்தார்கள். பெஞ்சு கிளார்க் கிருஷ்ணன் சமயோசியானான்:

"முத்தையாகிட்ட கேட்கப்படாது. ஒரு சமயம், அவருக்கு ஸ்காலர்ஷிப்பாய் முந்நூறு ரூபாய் காலேஜில வந்தது. அதுல இருநூறு ரூபாய் தந்தாரு”

அன்னம்மா, மீதி நூறுருபாயை என்ன பண்ணுனான் என்று கேட்கப்போனாள். பிறகு கணவர் முகத்தில் இன்னும் மாறாமல் இருந்த கடுமையைப் பார்த்துவிட்டு, பேச்சில் பின்வாங்கினாள். கோபால்ராஜ் சாட்சி சொன்னான்:

"என்னை நம்புங்க ஸார். இவருக்குக் கடன் கொடுத்ததுக்கு நான்தான் சாட்சி. கொடுத்த கடனை எவனர்வது திருப்பிக் கொடுக்க வருவானான்னு நீங்க அதிர்ச்சியடையுறது நியாயந்தான். ஆனாலும், இது நிஜம். சரி. நாங்க வாறோம். முத்தையாவ நாளைக்கு என்னைப் பாக்கச் சொல்லுங்க."

இருவரும் புறப் பட்டார்கள். போகிற போக்கில், கிருஷ்ணன், "ஒங்க பையன்கிட்ட கிருஷ்ணன்னு சொன்னால் புரியாது. டுப்ளிகேட் முத்தையான்னு சொல்லுங்க. அந்த அளவுக்கு நாங்க ரொம்ப நெருக்கம்" என்று சொல்லிக்கொண்டே போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/96&oldid=558704" இலிருந்து மீள்விக்கப்பட்டது