பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 * சத்திய ஆவேசம்

"அப்பா. நான் ஒங்ககிட்ட அடிக்கடி சொல்வேன் பாருங்க, அது இவங்கதான். அம்மா. முந்தாநாள்கூட ஒங்ககிட்ட சொன்னேன் பாருங்க. இவங்க தான் அது."

"எவங்க... எதுப்பா?

"அதான் எங்க பழைய பிரின்ஸ்பால் மகள் மேகலா."

மேகலா, நார்க்கட்டிலில் நலிந்து கிடந்த அருணாசலத்தையே பார்த்தாள். பிறகு, அந்தக் கட்டிலை நெருங்கி, துடிப்படங்கிக் கிடந்த அந்த மனிதரை துடித்த அந்த காலையே பார்த்தாள். அருணாசலமும், முத்தையாவின் அறிமுகத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தன் கால்களையே பொருட்படுத்திக் கொண்டிருந்த மேகலாவை, வைத்த கண் வைத்தபடி பார்த்தார் கரிமண்டாத செந்தீ போன்ற அந்த முகத்தை - மேனியெல்லாம் ஒளிப்பிழம்பாகி முகமென்ற ஜோதியின் அன்பு வீச்சில் அகப்பட்டார், அருணாசலம், அப்பா பேசாமல் இருக்கிறாரே என்று நினைத்து, இவங்க மேகலா..... எங்க பிரின்ஸ்பால் பொண்ணுப்பா. என்று தன்னை உசுப்பிய மகனை அலட்சியமாகப் பார்த்துப் பேசினார்:

"நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா என்ன? ஒங்க காலேஜ் கலாட்டாவுல, அத்தனை பசங்க மத்தியலயும் தைரியமாய், தன்னந்தனியாய் நின்ன பொண்ணாச்சே இது. இதோட முகம் எப்பவும் என் கண் முன்னால நிக்குது. ஏன்னால். அவ்வளவு துணிச்சலான படிச்ச பொம்மனாட்டிங்கள, இந்தக் காலத்துல பார்க்க முடியாது."

தந்தையின் பேச்சால், முத்தையா சகஜமானான். இதற்குள் மேகலா, தன் வருகையின் நோக்கத்திற்கு தலைப்புச் செய்தி போட்டாள்.

"நாலு நாளாய் முத்தையா வர்ல. ஒருவேள, அவங்க பாதருக்கு கால் எப்டி இருக்கோ, போய்ப் பார்த்துட்டு வான்னு அப்பாதான் அனுப்பி வச்சார் ஒங்களுக்கு இப்போ கால் எப்டி ஸார் இருக்கு?

"பரவாயில்லாம்மா...ஒடி ஆடுன கட்டை இது. காலு துண்டாய் ஒடிஞ்சு, தனியாய் விழுந்தாலொழிய ஒண்னும் நடக்காது. இன்னும் நடக்கிறதுக்கு ஒரு மாசம் ஆகும் போலத் தோணுது. இருந்த இடத்துலயே இருந்து பழக்கமில்லாத நான், இப்போ படுத்த இடத்துலயே படுக்க வேண்டியதாய் போச்சு. என்னமோ, தலைக்கு வந்தது, தலைப் பாகையோட போச்கது."

மேகலா, அந்த மனிதரின் பெருமிதமான தன்னம்பிக்கையில் ஆட்கொள்ளப்பட்டு, அவரை மலைப்பாகவும், புதிராகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/99&oldid=558707" இலிருந்து மீள்விக்கப்பட்டது