பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சத்திய வெள்ளம்

உதவிகளைச் செய்ய முடியும் என்பதும் அண்ணாச்சிக்குத் தெரியும். அதனால் தான் அந்த மழைக் கோப்பான முன்னிரவில் குறிப்பாக அந்த ஏலக்காய்த் தோட்டத்தைத் தேடிச் சென்றிருந்தார் அவர். உள்ளுற ஒரு நம்பிக்கை இருந்தது அவருக்கு.

தாங்கள் சென்ற லாரியைப் பிரதான சாலையில் நிறுத்தி விட்டு முதலில் அவர் மட்டும் மழையோடு மழையாகத் தோட்டத்துக்குள் சென்றபோது அங்கே எந்த விவரமும் தெரியவில்லை. எஸ்டேட் அலுவலகக் கட்டிடங்கள் ஆளரவமின்றி இருந்தன. ஏலக்காய் உலர்த்திக் குவிக்கும் தகர வுெட்டுகள் இருந்த பகுதிக்குப் போகுமுன் தற்காப்பைக் கருதிக் கீழே லாரியிலிருந்த மற்றவர்களையும் மேலே வரச்சொல்லி டார்ச் மூலம் சமிக்ஞை காண்பித் திருந்தார் அவர் மற்றவர்களும் கூட்டமாக வந்து சேர்ந்த பின் அவர்கள் எல்லாருமாக அங்கே ஒவ்வொரு பகுதி யாகச் சுற்றினார்கள். மலை உச்சியில் பின்புறம் பள்ள தாக்கில் பேரோசையுடன் ஒரு காட்டாறு ஒடும் இடத் தருகே மேட்டில் அசைந்திருந்த தகரக் கொட்டகை வாசலில் மட்டும் கம்பளிக் கோட் அணிந்து பீடி புகைத்த படி ஒரு தடித்த ஆள் உட்கார்ந்திருந்தான். அண்ணாச்சி அவன் முகத்தில் டார்ச் ஒளியைப் பாய்ச்சிப் பார்த்து விட்டு அவன் சந்தேகப்பட்டுக் கூப்பாடு போட்டோ, விஸில் ஊதியோ எஸ்டேட்டின் வேறு பகுதிகளிலிருந்து ஆட்களைக் கூப்பிட்டுவிடாமல் இருக்கட்டும் என்று, “யாரது மருதமுத்துத் தம்பிதானே?” என்று தமக்குத் தெரிந்த அவன் பெயரையும் சொல்லிக் கூப்பிட்டு வைத்தார். டார்ச் லைட்டுகளோடு கம்பும் கழியுமாக மழை இருளில் பலரைப் பார்த்து மிரளத் தொடங்கியிருந்த அவன் அண்ணாச்சியின் குரலைக் கேட்டதும் அடை யாளம் புரிந்து தெம்படைந்தான்.

“அடடே! அண்ணாச்சிங்களா? ஏது இந்நேரத்துக்கு இந்தப் பக்கம்?” என்று விசாரித்தபடி எழுந்து வந்தான் அந்த எஸ்டேட் வாட்ச்மேன். அண்ணாச்சி மேலும் தொடர்ந்து அவனைக் கனிவாக விசாரித்தார்.