பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ił0 - சத்திய வெள்ளம்

என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஜனநாயகத்தில் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களுக்குத்தான் இடம் உண்டு. மக்களை அதிகாரம் செய்பவர்களுக்கு இட மில்லை. இவர்களுடைய அதிகார வெறியோ எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களிடம் சிலர் தாட்சண்யம் காரணமாகப் பயப்படுகிறார்கள். வேறு சிலர் பயம் காரணமாகத் தாட்சண்யப்படுகிறார்கள். இன்று மாலை பேராசிரியர் பொழில் வளவனாரும், மல்லை. இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என் வீட்டுக்குத் தேடி வந்தார்கள். அவர்கள் என் வீட்டுக்குத் தேடி வந்ததே எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் துறைத் தலைவர் பொழில் வளவனார் வேறு அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். அவர் வந்த விதமும் பேசிய விதமும் வெறுப்பூட்டுவதாயிருந்தது. சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டேன். -

“நம்ம பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பா இவங்க உங்ககிட்டே ஏதோ பேசணுமாம். ‘உங்களை அறிமுகப்படுத்தச் சொல்லி என்னைக் கூப்பிட் டாங்க. அதுதான் இப்படிப் பார்த்து அறிமுகப்படுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்று ஆரம்பித்தார் பொழில்வளவனார். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. மாணவர் பேரவைத் தேர்தல் பற்றி மாணவர்கள் அல்லாத இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என்னிடம் வந்து பேச என்ன இருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த மாதிரி விஷயங்களில் நான் எப் போதுமே ‘ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு என்பது தெரிந்தும் பொழில் வளவனார் என்னிடம் யார் யாரையோ கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியது எனக்கு எரிச்சலூட்டியது. பத்து வருஷங்களுக்கு முன் பொழில்வளவனார் பி.எச்.டி.க்கு தீஸில் ஸப்மிட் செய்தபோது சங்க இலக்கியத்தில் காக்கை’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதியதாகச் சொல்வார்கள். வரவர அவர் போகிற போக்கைப் பார்க்கும்போது சங்க இலக்கியத்தில் காக்கை என்ற