பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சத்திய வெள்ளம்

ஒர் அரை மணி நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார் பொருளா தாரப் பேராசிரியர் பூதலிங்கம். அன்றிரவு விடுதி அறைக்குப் போகாமல் மணவாளனோடு ஹோட்ட லிலேயே தங்கினான், பாண்டியன். தூக்கம் வரும் வரையில் பொருளாதாரப் பேராசிரியரின் நேர்மையைப் பற்றியும், அஞ்சாமையைப் பற்றியும், அண்ணாச்சியைப் பற்றியும் வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். “அண்ணாச்சியும்தான் நமக்காக உதவுகிறார். பாடு படுகிறார், ஆனால் ஒரு நாளாவது அவர் தம் எல்லையைக் கடந்து வந்ததே கிடையாது. வெளியே இருந்து உதவிகள் செய்வதைத் தவிர பல்கலைக் கழகத்துக்கு உள்ளே வந்து மாணவர்களை மிரட்டினார், ஆசிரியர்களை மிரட்டினார் என்ற பேச்சே கிடையாது. ஆனால், இராவணசாமி வகை ஆட்கள் எதைச் செய்யவும் கூசுவதில்லை பார்த்தாயா பாண்டியன்?” என்றார் மணவாளன். - “இப்படி ஒப்பிடறதுகூடத் தப்பு! அண்ணாச்சி பதினெட்டாவது வயதிலிருந்து இந்த நாட்டின் பெரிய பெரிய தேச பக்தர்களோடெல்லாம் ஜெயிலுக்குப் போன வர். ஒர் உயரிய இலட்சியத்துக்காகக் குடும்ப வாழ்வுக்கே முழுக்குப் போட்டுவிட்டுத் தேசசேவையில் இறங்கியவர். தேசப் போராட்டத்துக்காக வீடு வாசல்களை இழந்தவர். இன்றைக்கு வீடு வாசல்கள் சொத்துச் சுகங்களை அடை வதற்காகவே பொது வாழ்வுக்கு வருகிறவர்களையும் அண்ணாச்சியையும் ஒப்பிடுவதே எனக்குப் பிடிக்க வில்லை” என்றான் பாண்டியன். பேராசிரியர் பூதலிங்கம் புறப்பட்டுப் போகும்போதே அண்ணாச்சியும் கடைக்குப் போயிருந்தால். -

இவர்கள் இங்கே அவரை வியந்து பேசிக் கொள்ள முடிந்தது. - *

மறுநாள் விடிந்ததுமே அண்ணாச்சி செய்தித் தாள் களுடனும், கண்ணுக்கினியாளுடனும் ஹோட்டலுக்கு