பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 117

டோம். அதன்படி பார்த்தால் பட்டியலில் பாண்டியனின் பெயரை நீக்கிவிட்டுப் பேரவைச் செயலாளர் பதவிக்கு வெற்றிச் செல்வன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக நீங்களே அறிவித்திருக்க வேண்டும். நீங்களோ இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஒட்டியுள்ள சுற்றறிக்கையில் பாண்டியனும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறீர்கள்.”

“ஆமாம்! அப்படித்தான் அறிவித்திருக்கிறேன். அதற்கென்ன வந்தது இப்போது ?” .

“இரு சாராருக்கும் பொதுவில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் தாங்கள் ஒரு சாராருக்காகச் சார்பு காட்டிச் சாய்ந்து செயல்படுகிறீர்கள் என்று தெரிகிறது.” அதை நானும் எங்கள் தரப்பு மாணவர்களும் வன்மை யாகக் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.”

இதைக் கேட்டுப் பேராசிரியர் பூதலிங்கம் அன்பர சனையும் அவனோடு வந்திருந்தவர்களையும் அலட்சி யமாக ஏறிட்டுப் பார்த்தார்; சிரித்தார். அவர்கள்மேல் கோபப்படுவதுகூட அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததாகி விடுமென்றுதான் அவர் நகைத்தார். அன்பர சன் ஆவேசமாகக் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டு பின்பு அவர் நிதானமாக அவனுக்கு மறுமொழி கூறினார்: “சட்டப்படி பட்டியலிலிருந்து எந்தப் பெயர்களையா வது நீக்க வேண்டியதிருக்குமானால் அது உன் பெயரா கவும், வெற்றிச்செல்வன் பெயராகவும்தான் இருக்கும். மாணவர்கள் அல்லாத குண்டர்களையும் சேர்த்துக் கொண்டு அன்றிரவு வி.சி. வீட்டிலிருந்து அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர் கூட்டத்தின் மேல் கல்லெறி நடத்தினர்கள். அரசியல் செல்வாக்குள்ள உள்ளுர்க்காரர்களின் உதவியோடு பாண்டியனை விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய்ப் பயமுறுத்தி விலகல் கடிதம் எழுதி வாங்கித் தபாலில் அனுப்பினர்கள். இந்தக் காரியங்களையெல்லாம் நீங்கள்தான் செய்தீர்கள்