பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 121

தாயுமானவனாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டி ருந்தார். நிமிர்ந்து பார்த்துப் பூதலிங்கத்தை உட்காரச் சொல்லிவிட்டுச் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தார் துணைவேந்தர். கையெழுத்து வாங்கி முடித்த தாள்களோடும் ஃபைல்களோடும் பதிவாளர் வெளியேறியதும் துணைவேந்தரின் கவனம் திரும்பியது.

“மிஸ்டர் பூதலிங்கம்! இன்று காலை நான் வீட்டை விட்டுப் புறப்படுமுன் மாணவர்கள் ஊர்வலமாக வந்து என்னிடம் ஒரு புகார்க் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அபேட்சை மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டதாகக் கடிதம் எழுதிய ஒரு பையனின் பெயரையும் காலையில் வெளியிட்ட ஃபைனல் லிஸ்டில் நீங்கள் சேர்த்திருக் கிறீர்களாம். அப்புறம் எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்ளுகிறீர்களாம்.”

துணைவேந்தர் கூறியதைக் கேட்டுப் பூதலிங்கத்துக்கு உள்ளுறக் கோபம் வந்தாலும் அதைப் புறத்தே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு,

“இவற்றையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா சார்?” என்று கேட்டார்.

துணைவேந்தரிடமிருந்து இதற்கு நேரடியாக மறுமொழி எதுவும் கிடைக்கவில்லை.

“இந்தப் பையன்களில் சிலபேர் உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கட்சி ஆட்கள் மூலம் மந்திரிவரைபோய் விடுகிறார்கள். அதுதான் பயப்பட வேண்டியிருக்கிறது” என்று சுற்றி வளைத்து மறுமொழி வந்தது துணை வேந்தரிடமிருந்து. அந்த மறுமொழியில் அவருடைய தயக்கமும் பயமும் என்னவென்பதும் தெரிந்தது.

உடனே மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வரை போக முடிந்த செல்வாக்கு உள்ள அந்தப் பையன்கள் செய்த கொடுமைகளை ஒவ்வொன்றாகத் துணைவேந்தரிடம் விவரித்தார் பேராசிரியர். கல்லெறிந்தது, பாண்டியனை