பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 125

நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது அவருக்கே அருவருப்பாக இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிமைப்பட்டுவிட நேரிடுவதை அவர்தம் சொந்த அநுபவத்திலேயே பலமுறைகள் உணர்ந்திருந்தார்.

ஒன்பதாவது SjöğSUITUID

தொடக்கத்தில் தம்மோடு போட்டியிட்ட அதிகத் தகுதியுள்ள சிலரை வீழ்த்திவிட்டு இந்தப் பதவியைத் தாமே அடைய ஒரளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை நாடித் துணைவேந்தர் தாயுமானவனார் போயிருந்தார். அதுதான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருந்தது. பதவிக்கு வந்த பின் அதே அரசியல் செல்வாக்கு விநா டிக்கு விநாடி அவரைத் தேடி வந்து மிரட்டவும், நிர்ப் பந்தப்படுத்தவும் செய்தபோது அவரால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. எது எப்படி இருந்த போதிலும் அன்று நண்பகலில் பூதலிங்கத்தை வரவழைத்துப் பேசிய பின்னர் மாணவர் பேரவைத் தேர்தல்`சம்பந்தமாக இனி எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தார் தாயு மானவனார். நாகரிகமே இல்லாத முரடர்களான கோட் டச் செயலாளர் குருசாமியும், இராவணசாமியும் சொல் வதைக் கேட்டுக்கொண்டு எதையாவது தாறுமாறாகச் செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தம்மை முழுமூச்சோடு எதிர்க்கும் சூழ்நிலையைத் துண்டிவிட அவர் தயாராயில்லை. குருசாமியும், இராவணசாமியும் மாற்றி மாற்றி ஃபோன் செய்தும் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மெல்ல நழுவிவிட்டார் துணை வேந்தர். அதே சமயம் அவர்களைப் பகைத்துக் கொள்ள வும் அவர் தயாராக இல்லை. தந்திரமாகப் பேராசிரியர் பூதலிங்கத்தின் தலையில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொண்டார் தாயுமானவனார். பாண்டியன் கடத்தப்பட்டு மீண்டதை ஒட்டி மாணவர்கள் மத்தியில் ஒருவிதமான கொந்தளிப்பும், கோபமும் இருந்த