பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 சத்திய வெள்ளம்

தால் குருசாமியும், இராவணசாமியும் வெளிப்படையாகப் பல்கலைக் கழக எல்லைக்குள் வந்து வேலை செய்யப் பயப்பட்டார்கள். கல்லெறி முதல் பாண்டியன் கடத்தப் பட்டது வரை சகலமும் பத்திரிகைகளில் வேறு வெளி வந்துவிட்டது. மாணவர்களை ஆதரித்து எழுதியிருந்த பத்திரிகைகள் கட்சிக்காரர்களின் தலையீட்டையும் வன்முறைகளையும் துணைவேந்தர் பல்கலைக் கழக எல்லையில் போலீஸைக் கூப்பிட்டதையும் கண்டித்து எழுதியிருந்தன. பாண்டியனின் அறையிலும் வெளியேயும், வராந்தாவிலுமாகக் காவலுக்கு இருப்பதுபோல நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டிருக்க ஏற்பாடு செய்தி ருந்தார் மணவாளன். ஒரு பாதுகாப்புக்காக மோகன் தாளையும் அதே அறையில் தங்கிக் கொள்ளச் சொல்லி யிருந்தார்கள். - மறுநாள் காலையில் விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருந்தன. அந்த இரவும் அதையடுத்து விடிவதற்கிருந்த வைகறையும் மாணவர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. எங்கும் அமைதியாய் இருந்தாலும், எந்த விநாடியில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்கும் ஒர் ஊமைப் பரபரப்பும் பல்கலைக் கழக எல்லையில் உள்ளடங்கித் தெரிந்தது.

குழப்பங்களை விளைவிக்கவோ, ஏதாவது கலவரம் செய்து தேர்தல்களைத் தள்ளிப்போடச் செய்யவோ, இனி இயலாது என்று கையாலாகாத்தனமும், அதனால் உண்டாகிய ஆற்றாமைக் கோபமுமாகத்துடித்துக் கொண்டி ருந்தனர் அன்பர சன் குழு வினர். ஆற் றா ைம - கையாலாகாத்தனம், பொறாமை இவை எல்லாம் உள்ளவர்களால் இனி இது இயலாது என்று எதிலும் அடங்கிவிடவும் முடியாது. கடைசி விநாடிவரை அவர் கள் எதையாவது செய்து கொண்டேதான் இருப்பார்கள். கடைசி விநாடிக்கு குழப்பமாக எதைச் செய்யலாம் என்று சிந்தித்துத் தவித்து முடிவில் ஒரு குழப்பத்துக்குத் திட்டமும்

போட்டார்கள் அவர்கள். -