பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 127

அங்கே பாண்டியனின் விடுதி அறையைக் காப்பதற்காக வராந்தாவிலும், அறைவாசலிலுமாகக் கம்பளிப் போர்வை, உல்லன் அங்கி, படுக்கை சகிதம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இரவிலும் தங்குவதற்கு நீடிக்கவே, அதே வரிசையைச் சேர்ந்த மற்ற அறைகளிலுள்ள மாணவர்கள் வெளியே வரவும், உள்ளே போகவும், நடமாடவும் அது இடையூறாக இருப்பதாகவும், பாண்டியனின் ஆதரவு மாணவர்கள் மற்ற அறை மாணவர்களை அடிப்பதாகவும், உதைப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் இரவு ஒன்பதரை மணிக்குமேல் ஹாஸ்டல் சீஃப் வார்டன் பேராசிரியர் பண்புச் செழியனிடம் போய்ப் பொய்யாக ஒரு புகார் செய்தார்கள் அன்பரசன் குழுவினர்.

பேராசிரியர் பண்புச் செழியன் அன்பரசன் குழுவின ரிடம் அநுதாபம் உள்ளவர்தான், என்றாலும் அந்த நள்ளிர வில் பெரும்பான்மை மாணவர்களின் அன்புக்கும் பிரியத் துக்கும் பாத்திரர்களாயிருக்கும் பாண்டியனிடமும், மோகன்தாஸிடமும் போய் மோதிக் கொள்வதற்குத் தயங்கினார் அவர்.

அன்பரசன் குழுவினரின் வற்புறுத்தலை மீற முடியா மல்தான் அவர்களோடு பாண்டியன் தங்கியிருந்த விடுதிக் குப் புறப்பட்டார் அவர் புறப்படுவதற்கு முன் மனத்தில் ஏதோ தோன்றியதால், அன்பரசனையும், வெற்றிச் செல் வனையும் பார்த்து, “நீங்கள் இருவரும் என்னோடு அங்கே வரவேண்டாம் என்ற நினைக்கிறேன். நானே போய் விசாரித்து அவர்களை எச்சரித்து விட்டு வருகிறேன்” என்றார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. “நாங்களும் வருகிறோம். எங்களுக்கு யாரிடமும் எதற்காகவும் பயம் கிடையாது” என்றார்கள்.

“உங்களையும் என்னோடு சேர்த்துப் பார்த்தால் அவர்கள் ஆத்திரம் அதிகமாகும்” என்றார் பண்புச் செழியன். 鐵

“நம்மவரான நீங்களே இப்படி எங்களை ஒதுக்கினால் எப்படி ஐயா?” என்று உரிமையை நினைவூட்டிக் குழைந்