பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சத்திய வெள்ளம்

தார்கள் அவர்கள். வேறு வழியின்றி அவர்களோடு பாண்டியனின் விடுதிக்குப் போனார் பிரதம விடுதிக் காப்பாளர் பண்புச் செழியன். அங்கே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விடுதிவராந்தா கலகலப்பாயிருந்தது. சில மாணவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். குளிர் தாங்க முடியாமல் சிலர் புகை பிடித்துக் கொண்டி ருந்தார்கள். கேரம்போர்டில் கவனமாக இருந்தனர் சிலர். அரட்டையடித்துச் சிரிப்பலைகளைக் கிளப்பிக் கொண்டி ருந்தது ஒரு கூட்டம்.

திடீரென்று எதிர்பாராத விதமாகப் பிரதம வார்ட னையும், அவரோடு அன்பரசன் குழுவினரையும் கண்ட தும் பாண்டியனின் விடுதி முகப்பில் இருந்த எல்லா மாணவர்களும் வந்து அவர்களை எதிர்கொண்டனர். வார்டனின் வரவால் மெல்ல மெல்ல ஒரளவு அமைதி வந்திருந்தது அங்கே. பண்புச் செழியனின் முதுகுக்குப் பின்னே மறைந்தாற்போல் நின்றார்கள் அன்பரசன் முதலியவர்கள்.

டேய், அன்பைப் பார்த்தாயா, பண்பின் முதுகுக்குப் பின்னால் ஒளிகிறது என்று ஒரு மாணவன் கேட்டதும், ஆமாண்டா! பண்புக்குப் பின்னால் அன்பு ஒளியும், பண்பு மாண்புக்குப் பின்னால் போய் ஒளியும். வேறே வேலை இல்லையா உங்களுக்கு என்று மற்றொரு மாணவன் இதற்குப் பதில் கூறியது மெல்லிய குரலில் இருந்தாலும் சீஃப் வார்டனின் காதில் விழுந்து விட்டது. இதைக் கேட்டு அவர் ஒரளவு ஆத்திரமடைந்து விட்டார்: - “ஒரே இடத்தில் கூடிக் கொண்டு இப்படி மற்ற அறை மாணவர்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்வது நல்ல தல்ல. உடனே அவரவர்கள் அறைக்குக் கலைந்து சென்று விட வேண்டும் நீங்கள்” என்று நிதானமாகத்தான் ஆரம்பித் தார் அவர். ஆனால் வாக்கிலே சனி என்பார்களே, அது வந்து சேர்ந்தது அவருடைய பேச்சின் இறுதிப் பகுதியில், “இந்த மாநிலத்திலேயே வேறெந்த விடுதியிலும் இல்லாத அளவு இங்கே முதல் தரமான சாப்பாடாகச்