பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சத்திய வெள்ளம்

“இந்த விஷயம் மட்டுமில்லை! ஏதோ வேலை யில்லாத தண்டச் சோற்றுத் தடிராமன்களைப் பேசுவது போல் நீங்கள் எங்களைக் கேவலமாகப் பேசிய வாக்கியங் களும் சேர்த்தே துணைவேந்தர் காதுக்குப் போகும்” என்று மாணவர்கள் சுடச்சுட அவருக்குப் பதில்கள் கூறினார்கள்.

நேரம் இரவு பன்னிரண்டு மணி வரை ஆகிவிட்டது. பல நூறு மாணவர்கள் சூழ்ந்து வளைத்துக் கொண்டு விட்டதனால் தலைமை விடுதிக் காப்பாளர் பண்புக் செழியனோ, அவரோடு அந்த அன்பரசன், வெற்றிச் செல்வன் முதலியவர்களோ இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசையக் கூட முடியவில்லை. பன்னிரண்டே கால் மணிக்குப் பண்புச் செழியன் பணிந்து வழிக்கு வந்தார். “மாணவர்களே ! நான் கூறியதில் தவறாக ஏதாவது இருந்தால் அதற்காக வருந்துகிறேன். உங்கள் அன்பான மன்னிப்பையும் கோருகிறேன்” என்று அவர் கூறிய பின்பே மாணவர்கள் அவரோடு வந்தவர்களையும், அவரையும் அங்கிருந்து செல்ல அநுமதித்தனர்.

இரவு ஒரு மணிக்கு விடுதிகளில் அரவம் அடங்கிவிட் டது. பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் காவலாக அறைக்கு உள்ளேயும், வெளியேயும், வராந்தாவிலும் வரிசையாக மாணவர்கள் படுத்திருந்தனர். விடியற்காலை நாலு நாலரை மணிக்குப் பாண்டியன் முதலியவர்களுக்கு ஒரளவு வேண்டியவனும், அந்தப் பகுதி விடுதிகளுக்கு ‘நைட்வாட்ச்மேனு'மாகிய காத்தபெருமாள். என்பவன் வந்து, பல்கலைக் கழக மேற்கு வாயிலருகே சந்தேகத்துக் குரிய ஆட்களோடு இரண்டு மூன்று தென்மணிலாரி சர்வீஸ் லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வராந்தாவில் படுத்திருந்த மாணவர்களில் சிலரை எழுப்பித் தகவல் சொன்னான். அடுத்த பதினைந்து நிமிஷங்களில் இந்தச் செய்தியை அறிவிக்க மாணவர்கள் எல்லோரும் அவசரம் அவசரமாக எழுப்பப்பட்டனர். அறைக்குள்ளிருந்த பாண்டி யன், மோகன்தாஸ் ஆகியோரும்கூட எழுந்துவிட்டனர். லாரிகளில் தென்பட்டவர்கள் சரளைக் கற்கள், சோடா