பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 131

பாட்டில்கள், பாலாக் கம்பு, வெட்டரிவாள்கள், கடப் பாரைகளோடு வந்திருக்கக் கூடும் என்று காவல்காரன் காத்தபெருமாள் குறிப்பாக எச்சரித்துவிட்டுப் போயி ருந்தான்.

விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல். ஏதாவது கலகம் நடத்தி நிலைமையை நெருக்கடியாக்கிக் காட்டி னால் துணைவேந்தரை நிர்ப்பந்தப்படுத்தி மறுபடியும் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கலாம் என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியாயிருக்கக்கூடும் என்று பாண்டியன் சந்தேகப் பட்டான். குளிரும் பணியும் தூக்கச் சோர்வுமாக இருந் தாலும் எப்பாடு பட்டாவது எதிரிகளின் சூழ்ச்சியைச் சிதற அடிப்பதென்று துணிந்தார்கள் அவர்கள். அந்த அகாலத்திலும் தங்களோடு புறப்படுவதற்காக விழித்தி ருப்பவர்கள் நானுாறு ஐந்நூறு பேர் தேறமுடியும் என்று தெரிந்தது பாண்டியனுக்கு. இவ்வளவு பேர்களும் மொத்த மாக மேற்கு வாயிலை நோக்கிப் படையெடுத்தால் லாரிக் காரர்கள் பயந்து அவற்றை ஒட்டிக் கொண்டு திரும்பி ஒடிவிடுவார்கள் என்று தோன்றவே, மாணவர் கூட்டம் தெற்கு வாயில் வழியே வெளியேறி இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து போய் லாரிகளை வளைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.

தாங்கள் வெற்றி பெற முடியாத தேர்தல்களை நடக்கவே விடக்கூடாது என்று வெறியுடன் எதிர்த் தரப்பினர் கடைசி விநாடிவரை முனைந்து நிற்பது தெரிந்தது. பிரதம விடுதிக் காப்பாளர் பேராசிரியர் பண்புச் செழியனும் மற்றவர்களும் வந்து வம்புக்கிழுத்து அதனால் மாணவர்களிடம் சிக்கித் துன்பம் அடைந்து விடுபட்டுப் போனபின் அவர்கள் மூலம் ஊருக்குள் செய்தி பரவி அதன் விளைவாக இந்த லாரிகளும் இந்த அடியாட்களும் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்க முடிந்தது. எதற்கும் முறைப்படி போலீஸுக்குத் தகவல் தெரிவிக் கலாம் என்று பட்டமளிப்பு விழா மண்டபத்தை ஒட்டி இருந்த பொது டெலிபோன் பூத்துக்குப் போய் ஃபோன்