பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி {33

வளைக்கவே, குண்டர்களில் பெரும்பாலோர் இறங்கி ஒடிவிட்டார்கள். மாணவர்கள் கூட்டம் வெள்ளமாகப் பெருகி நிற்கவே, குண்டர்களால் - அவர்களிடம் பயங்கர மான ஆயுதங்கள் இருந்தும்கூட - மாணவர்களை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்குள் நன்றாக டிரைவிங் தெரிந்த மாணவர்கள் அந்த மூன்று லாரியையும் ஒட்டிக் கொண்டு போய்ப் பல்கலைக்கழக எல்லைக்குள் விடுதிகளுக்கு அருகே நிறுத்திக் கொண்டு விட்டார்கள். போலீஸுக்கோ, வி.சி.க்கோ காட்டுவதற்குப் போதுமான கற்கள், அரிவாள், சோடா பாட்டில்கள், கடப்பாரை, இரும்புக் குழாய்கள், பழைய சைக்கிள் செயின்கள் எல்லாம் அந்த லாரிகளில் இருந்தன.

இதற்குள் பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வேறு பல விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கூடிவிட்டார் கள். விடுதி மாணவர்கள் காப்பி-சிற்றுண்டிக்குச் சென்ற போதுகூடக் கலகக்காரர்களை ஏற்றி வந்த லாரிகளுக்குக் காவலாக மாற்று ஏற்பாடு செய்துவிட்டுத்தான் போனார் &$óᎢ,

ஏற்கனவே அறிவித்திருந்தபடி பேரவைத் தேர்தலுக் காக அன்று பல்கலைக் கழகம் விடுமுறை. காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணிவரை மாணவர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்தபின் நான்கு மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பேராசிரியர் பூதலிங் கமும், அவருடைய பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் பல்கலைக்கழக நூல் நிலையக் கூடத்தில் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்து கொண்டி ருந்தார்கள். நூல் நிலைய முகப்பு சுறுசுறுப்பாகத் தென் பட்டது. பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரத்துக்கு விடுதியில் உள்ள மாணவிகள், வெளியிலிருந்து வந்து படிக்கிற மாணவிகள் எல்லோ ருமாக வாக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்ததனால் ஒன்பதரை மணிக்கே நூல் நிலைய