பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சத்திய வெள்ளம்

உடனே பெருவாரியான மாணவர்கள், விசில், கூப்பாடு, எதிர்ப்புக் குரல்கள் மூலம் அவர்கள் பின்னால் தாமதமாக வந்து முன்னால் நிற்பதை எதிர்த்தனர். ஆனால் பாண்டி யனும், மோகன்தாஸும் மிகவும் பெருந்தன்மையாக அன்பரசன், வெற்றிச்செல்வன் ஆட்களை வணங்கி வரவேற்று முன்னாலேயே தங்களோடு சேர்ந்து கியூவில் நிற்கச் செய்து கொண்டார்கள்.

பல்கலைக் கழக எல்லைக்குள் ஒட்டிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட தென்மணி லாரிகளைச் சுற்றிச் சில நூறு மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். முன்னால் வோட்டுப்போட்ட மாணவர்கள் போய் அவர்கள் செய்து கொண்டிருந்த காவலை ஒப்புக் கொண்டு அவர்களை வோட்டுப் போட அனுப்ப வேண்டியிருந்தது. காலையில் விடிந்ததுமே அந்த லாரிகளையும், அதில் வைக்கப்பட்டி ருந்த ஆயுதங்கள், கற்குவியல்கள், மண்ணெண்ணெய் நிரப்பிய டின்கள் ஆகியவற்றோடு தென்மணி லாரி என்ற பெயர் முகப்பையும் புகைப்படம் எடுத்திருந்தார்கள் மாணவர்கள். - -

பிரதம தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய பூதலிங் கமும் அவரைச் சேர்ந்தவர்களும் கட்டுப்பாடாகச் செய லாற்றியதாலும், பெரும்பான்மையான மாணவர்கள் ஒற்றுமையாக இருந்ததாலும் கலவரம் நிகழ்த்த விரும்பிய வர்களின் சதி எதுவும் பலிக்கவில்லை. தென்மணி லாரி உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இராவண சாமி போலீசில் புகார் எழுதிக் கொடுத்திருந்தார். லாரி களைச் சாலையோரம் நிறுத்தி வைத்துவிட்டுத் தம்முடைய டிரைவர்கள் டீக்கடைக்குப் போயிருந்தபோது மாணவர்கள் அநியாயமாக அவற்றைக் கடத்திக் கொண்டு போய்ப் பல்கலைக் கழக எல்லைக்குள் நிறுத்திக் கொண்டதாக இராவணசாமியின் புகார் எழுதப்பட்டிருந்தது. அக் கடித நகல் துணைவேந்தருக்கும் கொடுத்தனுப்பப் பட்டிருந்தது. பாண்டியன் முதலிய மாணவர்கள் இன்னொரு பிரிவு மாணவர்களைத் தாக்கவும், அவர்கள் தங்கியிருக்கும்