பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சத்திய வெள்ளம்

பார்க்கிறேன். அவசரப்படாதீர்கள். எம்.எல்.ஏ.யோ கட்சிச் செயலாளரோகூட இங்கே வரவேண்டாம். மாணவர்கள் அவர்கள் மேல் ரொம்பக் கோபமாயிருக்கிறார்கள். லாரி கள் இருந்தால் நானே அவற்றை வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுத்தான் துணைவேந்தரே அலுவலகத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்திருந்தார். தம்முடைய அறைக்குள் சென்று ஜன்னல் வழியே கீழே மைதானத்தைப் பார்த்தபோது நூல் நிலைய வாயிலில் வோட்டுப் போட மாணவர்களின் கியூ நிற்பதை யும் தொலைவில் விடுதிகளின் அருகே பெருங் கூட்டமான மாணவர்கள் சூழ லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் துணைவேந்தர் பார்த்தார். அவர் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு போலிருந்தது. இராவணசாமி, போலீஸ், கட்சிச் செயலாளர் ஆகியவர்கள் சொல்கிறபடி கேட்கா விட்டால் இன்னும் சில ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அவர்கள் சொல்கிறபடி கேட்டுவிட்டாலோ, இளமையும், கோபமும், நியாய உணர்வும் உள்ள பல ஆயிரம் மாணவர்களை விரோதித்துக் கொள்ள நேரிடும். ஏற்கெனவே ஒரளவு மாணவர்களை விரோதித்துக் கொண்டும் ஆயிற்று. இராவணசாமியின் லாரிகளை ஒரு காரணமும் இன்றி மாணவர்கள் உள்ளே ஒட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள் என்றோ, மாணவர் களே அதில் ஆயுதங்களையும் கற்களையும் நிரப்பியி ருப்பார்கள் என்றோ அவர் நம்புவதற்குத் தயாராயில்லை. ஆனால் அதிகாரத்துக்கும் அரசியல் செல்வாக்கிற்கும் அவர் பயப்பட்டார். -

எப்படி ஒரு சூதாட்டத்தில் முதலில் வெல்ல வேண் டும் என்ற தவிப்பும், வெற்றியடைய ஆரம்பித்தபின் இனி மேல் தோற்கக் கூடாதே என்ற தவிப்பும் மாறி மாறி வருமோ அப்படியே அதிகாரத்திலும் பதவியிலும் கூடத் தவிப்புகள் இருந்தன. துணைவேந்தர் பதவியை அடைகிற வரை அதை அடையத் தவித்தவர் அவர். இப்போது தம்மை விட்டு அது போய்விடாமல் இருக்கவேண்டும் என்ற