பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சத்திய வெள்ளம்

கவும், தயக்கமாகவும் இருந்தது அவருக்கு. போலிஸி லிருந்தும், இராவணசாமியிடமிருந்தும் மாற்றி மாற்றி ஃபோன்கள் வந்து கொண்டிருந்தன. எம்.எல்.ஏ. ஓரளவு மிரட்டுகிற தொனியிலேயே பேசிவிட்டார்.

“நீங்க இத்தினி மெத்தனமா இருந்திங்கன்னா இந்தச் சமாசாரத்தை நான் மினிஸ்டர் காது வரை கொண்டு போக வேண்டியிருக்கும். அது உங்களுக்கே நல்லதில்லே. கோட்டச் செயலாளர் குருசாமியும் இதோ பக்கத்திலியே இருக்காரு. ஒண்ணு போலீஸை உள்ளே வரவிடுங்க, அல்லது எங்களையாச்சும் உள்ளாற வரவிடுங்க.”

“தயவு செய்து கோபிச்சுக்காதீங்க, மிஸ்டர் இராவண சாமி! நான் எப்படியும் உங்க லாரிகளைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன். இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் வரை எனக்காகப் பொறுத்துக்குங்க. அதுக் குள்ளே எப்படியாவது ஒரு வழி பண்ணிடலாம்.”

இராவணசாமி பதில் சொல்லாமல் மறுமுனையில் ஃபோனை உடைப்பது போல் வைக்கும் ஒசை துணை வேந்தரின் செவிப்பறையில் ஓங்கி அடிப்பதுபோல் ஒலித் தது. பதிவாளரைக் கூப்பிட்டு, உடனே வெளியாருக்குச் சொந்தமான அந்த லாரிகளை ஒட்டிக்கொண்டு போய்ப் பல்கலைக்கழகக் காம்பவுண்டுக்கு வெளியே விட்டுவிட வேண்டும் என்று மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப் பவோ, மைக் மூலம் அறிவிக்கவோ, செய்யலாமா என்று நினைத்தார் துணைவேந்தர். அப்போதிருந்த மனநிலையில் மாணவர்கள் அதற்குச் செவி சாய்க்கமாட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படவே அந்த யோசனையையும் கைவிட்டார் அவர். r

நண்பகல் மணி இரண்டே முக்கால். கார் டிரைவர், சிற்றுண்டிப் பொட்டலங்களையும், பிளாஸ்கில் காப்பியை யும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான். உடனே சிற்றுண்டி உண்ணவோ, காப்பி அருந்தவோ கூட அவர் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி