பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சத்திய வெள்ளம்

உணர்ந்தார் அவர். சிற்றுண்டி சாப்பிட்டார். காப்பி அருந்தினார். போவீசுக்கு ஃபோன் செய்து தாமே நிலைமையைச் சரி செய்து லாரிகளைத் திருப்பி அனுப்ப முடியும் என்றும் அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள்ளே வரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தார். லாரிகளின் உரிமையாளரான எம்.எல்.ஏ.க்கு ஃபோன் செய்தார். அவருடைய ஃபோன் என்கேஜ்ட் ஆக இருக்கவே அவர் ஒருவேளை மந்திரியோடு டிரங்கால் பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகமும் பயமும் ஏற்பட்டு விட்டது துணைவேந்தருக்கு எது எப்படியிருந்த போதிலும் மாணவர்களைத் தாம் நேரே சந்திக்காமல் பூதலிங்கத் தினிடம் அந்த வேலையைத் தந்திரமாக ஒப்படைத்து விட்டது ஒரு சிக்கலிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டுவிட்ட திருப்தியை அவருக்கு அளித்திருந்தது. தபாலில் வந்திருந்த யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்” தலைவரின் ரிப்போர்ட் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அவர் படிப்பதை அரைகுறையாக விட்டு விட்டு மீண்டும் அவர் முயன்றபோதுக.ட எம்.எல்.ஏ.யின் தொலைபேசி எண் அவருக்குக் கிடைக்கவில்லை. ‘என்கேஜ்ட் ஆகவே இருந்தது.

வாக்குகளை எல்லாம் எண்ணி முடித்துப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செய லாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்களையும், வாக்கு விவரங்களையும் எழுதி அதில் எண்ணியவர்கள், மாணவர் பிரதிநிதிகளின் கையெழுத்துக் களையும் வாங்கியபின் தாமும் கையெழுத்துப்போட்டு வைத்துவிட்டு உதவிப் பேராசிரியர் ஒருவரை கவனித்துக் கொள்ளச் சொல்லியபின் மைதானத்துக்கு வந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர் வெளியே வந்தபின் நூல் நிலையப் பிரதான வாயில் மீண்டும் உட்புறமாகத் தாழிடப் பட்டுவிட்டது. லாரிகள் மறித்து நிறுத்தப்பட்டி ருந்த இடத்தை அவர் அடைந்தபோது மணி நான்கு ஆவதற்கு இருந்தது. அங்கே பேராசிரியர் பூதலிங்கம் வரு