பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 149

அவர் அப்படிச் செய்தது பூதலிங்கத்துக்கு மிகவும் வேதனையாயிருந்தது. லாரியை ஒட்டிக் கொண்டு போக வந்த டிரைவர்கள் என்ற பேரில் குண்டோதரர்கள் போல் மூன்று தடித்த ஆட்களும் துணைவேந்தர் அலுவலக முகப் பில் வந்து நின்று கொண்டிருந்தார்கள். துணை வேந்தரின் மேஜைக்குமுன் எதிரே போடப்பட்டிருந்த பார்வையாளர் களுக்கான நாற்காலிகளில் ஒன்றில் பூதலிங்கம் அமர்ந்தி ருக்கவே இராவணசாமி, குருசாமி இருவரும் பக்கத்துக்கு ஒருவராகப் பேராசிரியரின் இருபுறமும் அமர்ந்து கொண் டார்கள். உள்ளே நுழையும்போதே துணைவேந்தருக்குப் பெரிய கும்பிடாகப் போட்டுவிட்ட அவர்கள் நாற்காலி களில் உட்கார்ந்த பின்பு அப்போதுதான் பூதலிங்கம் அங்கி ருப்பதையே கவனித்தவர்கள் போல், வேண்டாவெறுப் பாக, “வணக்கம்” என்றார்கள். நேர்மையும் துணிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் எதிர்ப்பட்டால் அவை அறவே இல்லாதவர்களுக்கு ஏற்படும் ஒருவிதத் தாழ்வு மனப் பான்மை உள்ளே வந்த இருவரிடமும் இருந்தது. பூதலிங் கத்துக்கு இருபுறமும் துணிந்து அமர்ந்துவிட்டாலும் அவர் கள் கூச்சத்தோடுதான் இருந்தார்கள். பூதலிங்கம் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். அவருடைய பார்வை நேர் எதிரே இருந்த துணைவேந்தரின் முகத்தில் இலயித்தி

“என்னை தப்பாகப் புரிஞ்சுக்காதீங்க, மிஸ்டர் இராவணசாமி! இந்தக் காலத்துப் பையன்களே ரொம்ப உணர்ச்சிவசப்படறாங்க. ‘சுருக்குனு கோபமும் வருது. எதோ இதமாக ரெண்டு வார்த்தை சொல்லி லாரிகளைத் திருப்பிக் கொண்டு போவதுதான் உங்களுக்கு நல்லது.” என்று பேச்சைத் தொடங்கினார் துணைவேந்தர். இராவண சாமியோ, கோட்டம் குருசாமியோ இதற்குப் பதிலே சொல் லாமல் இருந்தனர். துணைவேந்தரின் பேச்சிலிருந்த குழை வான தொனி பூதலிங்கத்துக்குப் பிடிக்கவில்லை.

“நீங்கள் உங்களுடைய லாரிகளின் மூலம் மாணவர் களைத் தாக்க முயன்றது தவறு! அதனால்தான் இவ்வள