பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 155

“இதோ லேட் ஃபீயும் உண்டு! இந்தாருங்கள்” என்று அவன் வலது கை நிறைய மிட்டாய்களை அள்ளி வைத்தாள் அவள். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது புது பிளாக் கட்டிடங்களின் வேலையைச் சுற்றிப் பார்ப் பது போல் ஓர் அரை மணி நேரத்தைக் கழித்திருந்து துணைவேந்தர் லாரிகள் பத்திரமாக வெளியேறியதை அறிந்த மகிழ்ச்சியுடன் நடந்தே நூல் நிலைய முகப்புப் பக்கமாக வந்தார். தேர்தல் முடிவுகளை அறிந்ததும் தம் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் முகமே இன்றித் தனியே பல்ஸெட் மட்டும் சிரிப்பது போன்ற ஓர் இயல்பற்ற சிரிப்புடன் கங்ராஜுலேஷன்ஸ் என்ற பாண்டி யனிடமும், வெற்றி பெற்ற மற்ற மாணவர்களிடமும் வந்து கைகுலுக்கினார் அவர் கண்ணுக்கினியாள் அதுதான் சமயமென்று அவரிடமும் ஒரு சாக்லேட்டைக் கொடுத்து விட்டு, “ஸார் வீ வாண்ட் டு ஸெல்லப் ரேட் திஸ்விக்டரி. கைண்ட்லி கிவ் அஸ் பெர்மிஷன் டு அஸம்பிள் ஹியர் அண்ட் ஹேவ் ஏ மீட்டிங்” என்று வேண்டினாள். உடனே அவர் முகம் மாறியது. அதில் கடுமை தெரிந்தது.

“நோ. யூ காண்ட் ஹேவ் ஏ மீட்டிங் இன் தி யுனி வர்ஸிடி காம்பஸ். யூ கேன் ஹேவ் இட் இன் ஸ்ம் அதர் ப்ளேஸ்.” என்று சொல்லிக்கொண்டே பின்புறம் கைகோர்த்த படி அவர் விரைந்து திரும்பி நடந்துவிட்டார்.

இப்படி மறுமொழி கூறியதற்காக அவர் மேல் எல்லா ருக்குமே கோபம் வந்தாலும் அந்த மகிழ்ச்சியான வேளை யில் அவரோடு வாதாடிச் சண்டை போடுவதன்மூலம் தங்கள் உற்சாகத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர்கள். அங்கிருந்து வெளியேறிப் போய்ப் பல்கலைக் கழகத்து எல்லைக்கு அப்பால் அண்ணாச்சிக் கடை வாசலில் பொதுக் கூட்டமாகப் போட்டு வெற்றிவிழாவை நடத்திக் கொள்ள லாம் என்று எல்லா மாணவர்களும் முடிவு செய்தார்கள்.

உடனே பொன்னையா எல்லா மாணவர்களும் ஆறரை மணிக்குள் அண்ணாச்சிக் கடை முன்புறத்தில் வந்து கூட வேண்டும் என்று நூல் நிலைய முகப்பில் ஏறி உரத்த