பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சத்திய வெள்ளம்

குரலில் அறிவித்துவிட்டான். கூட்டம் நடத்த அநுமதி வாங்க இரு மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குப் புறப் பட்டார்கள். மாலைகள் வாங்கவும் மேடை போடவும் சிலர் ஓடினர்.

அப்போது மாலை ஐந்து மணிகூட ஆகவில்லை என் றாலும் அண்ணாச்சிக்கும், மணவாளனுக்கும் நேரிலேயே வெற்றிச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும் என்று கருதியதால் பாண்டியன், மோகன் தாஸ், பொன்னையா, கண்ணுக்கினியாள் முதலிய சிலர் முன்கூட்டியே அண்ணாச்சி கடைக்கு விரைந்தார்கள்.

அவர்கள் அண்ணாச்சிக் கடையை நெருங்குவதற்கு முன்பு சிறிது தூரத்திலிருந்து பார்த்தபோது அங்கு ஏதோ பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்பது தெரிந்தது. அங்கும் இங்குமாகச் சில போலீஸ்காரர்களும் தெரிந்தனர். அருகே நெருங்க நெருங்க ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதற் கான அடையாளங்கள் அங்கே புலப்பட்டன.

பன்னிரண்டாவது அத்தியாயம்

அண்ணாச்சிக் கடை வாசலில் நாலைந்து சைக்கிள் கள் நடுத் தெருவில் தூக்கி எறியப்பட்டு நொறுக்கப்பட்டி ருந்தன. சோடா பாட்டில்கள், உடைந்த கண்ணாடித் துண்டு கள், எரிக்கப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகளின் சாம்பற் குவியல் என்று கடை முகப்பு அலங்கோலமாயிருந்தது. கடை ஏறக்குறையச் சூறையாடப்பட்டிருந்தது. வெற்றிப் பெருமிதத் தோடு அங்கே சென்றிருந்த பாண்டியன் முதலியவர்களுக்கு அங்கே என்ன நடந்திருக்க முடியும் என்பது புரியவும் புலப்படவுமே சிறிது நேரம் ஆயிற்று. கடையில் இருந்த சிறுவர்கள் இருவரையும் கூடச் சூறையாட வந்திருந்தவர் கள் அடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டதாகவும், அவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் பட்டிருப்பதாகவும் கூடியிருந்தவர்கள் சொன்னார்