பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சத்திய வெள்ளம்

யான தொண்டர்களைப் பெற்றுள்ள இயக்கங்கள்தான் நாட்டுக்குக் கர்மயோகிகளை அளிக்கும் தவக் கூடங்கள் போன்றவை. கடந்த விநாடிகளில் ஏற்பட்டு விட்ட இழப் புக்காக முகம் சுளிக்காமல் இந்த விநாடியின் செயல்களில் முகம்மலர ஈடுபடும் தொண்டர்கள் எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம்தான் இன்று தவம் இருக்கிறது. நேற்றைய தவங்களை முனிவர்கள் காடுகளி லும், மலைகளிலும் செய்ததாகச் சொல்லுகிறார்கள். இன்றைய தவங்களை நாம் காடுகளில் மலைகளில் செய்ய முடிவதில்லை. நாடுகளில், நகரங்களில், ஊர்களில், தெருக் களில் நாம் செய்ய வேண்டிய பல்லாயிரம் தவங்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் இது. அப்படித் தவம் செய்யும் திராணியுள்ள ஒர் உண்மைத் தொண்டரை இதோ பார்!. இன்று நடைபெறும் இந்த வெற்றி விழாக் கூட்டத்திலேயே இவருடைய கடைக்கு ஏற்பட்டு விட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் எந்தக் காரியத்தையாவது நாம் தொடங்க வேண்டும். என்ன சொல்கிறாய்?”

“நிச்சயமாகச் செய்யலாம்! ஆனால் என்ன செய்யப் போகிறோம். எப்படிச் செய்யப்போகிறோம் என்பதை யெல்லாம் இப்போதே அண்ணாச்சியிடம் சொல்லி விடாதே. அவர் வேண்டாம் என்று மறுத்தாலும் மறுத்து விடுவார். ஆனால் நாளைக் காலையில் பொழுது விடி வதற்குள் இங்கே இந்தக் கடை பழையபடி இருப்பதற்கான எல்லா உதவிகளையும் நாம் செய்ய வேண்டும்.’

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட் டம் நடத்துவதற்காகப் போலீஸ் அநுமதி பெறச் சென்ற மாணவர்கள் திரும்பி வந்து “அநுமதி கிடைக்கவில்லை பாண்டியன்! தேர்தல் முடிவுகளையொட்டி ஏற்பட்டி ருக்கும் கொந்தளிப்பான நிலைகளையும், அண்ணாச்சி கடைவாசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் கருதி இன்னும் ஒரு வார காலத்துக்கு மல்லிகைப் பந்தல் நகர எல்லையில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெறத் தடை விதித்திருக்கிறார்களாம். அதனால் நம் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் அநுமதி தர மறுக்கிறார்கள்” என்றனர்.